Karthigai Deepam: ஒரு பக்கம் சாமுண்டீஸ்வரி.. மறுபக்கம் ரேவதி! என்ன செய்யப்போகிறான் கார்த்தி?

11 hours ago
ARTICLE AD BOX

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த  சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரியை கடத்தி சென்ற வேன், கார்த்தியின் கார் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஒரு பக்கம் சாமுண்டீஸ்வரி, இன்னொரு பக்கம் ரேவதி:

அதாவது, கார்த்திக்கும் ரவுடிகளுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது, அடுத்து ரவுடிகள் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கிளம்பி செல்ல கார்த்திக் பின்புறத்தில் சாமுண்டீஸ்வரிவை வாயை பொத்தி கடத்தி செல்வதை கவனிக்கிறான்.

மறுபக்கம் ரேவதி, மகேஷை மணமேடையில் உட்கார வைத்து மந்திரம் ஓத மாயா எல்லாருக்கும் அட்சதை கொடுக்கிறாள். சந்திரகலா எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என அவசரப்படுகிறாள்.

காத்திருப்பு:

தாலி கட்ட போகும் சமயத்தில் ரேவதி முடியாது.. அம்மா இல்லாமல் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என தடுத்து விடுகிறாள். இதனால் மாயா, சந்திரகலா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். சிவனாண்டி சரி வெயிட் பண்ணி பார்க்கலாம் என சொல்ல மண்டபத்தில் எல்லாரும் சாமுண்டீஸ்வரிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கே ரவுடிகள் சாமுண்டீஸ்வரியை ஒரு குடோனுக்குள் அடைத்து வைக்கின்றனர், கார்த்திக்கும் அந்த வேனை பின்தொடர்ந்து குடோனுக்கு வந்து சேர்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை இன்று தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article