ARTICLE AD BOX

கரூர் மாவட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவரது வீட்டில் கேரளாவை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இது போக கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் கார்த்தி ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.