<p style="text-align: justify;">சேலம் மாவட்ட இளைஞர்களுக்காக தொழில் வேலைவாய்ப்பு திட்ட ஆள் சேர்ப்பு முகாம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதனுடைய உறுப்பு நிறுவனமான தமிழ்நாடு உயர் நிலை திறன் மேம்பாட்டு ஆட்டோ மொபைல் மையத்தின் மூலமாக Tamilnadu Finishing School திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு தேவைப்படும் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியினை வழங்கி வேலை வாய்ப்பையும் நிறுவனங்களில் பெற்று தருகிறது.</p>
<p style="text-align: justify;">தமிழ்நாடு உயர்நிலை திறன் மேம்பாட்டு ஆட்டோ மொபைல் மையத்தின் மூலமாக ஐந்து நாட்கள் தொழில் வேலை வாய்ப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஐந்தே நாட்கள் பயிற்சியினை முடித்து உடனடியாக தாம் விருப்பப்படும் தொழிற்சாலையில் தகுதிகேற்ற பணியில் சேர வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் 8வது, 10வது, +2, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் கட்டணம் ஏதுமின்றி சேர்ந்து வேலைவாய்ப்பினை பெற இயலும். ஐந்து நாட்கள் பயிற்சிக்கு பின்பு அரசு சான்றிதழ் வழங்கப்படும். வேலை தேடுவோர்க்கும், உடனடி வேலைவாய்ப்பை எதிர் பார்ப்போருக்கும் இது உகந்த திட்டமாகும்.</p>
<p style="text-align: justify;">இத்திட்டத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமினை சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது. இதற்கான ஒரு நாள் முகாம் வரும் 25.02.2025 அன்று காலை 10.00 மணிக்கு சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக (Automobile) நிர்வாக இயக்குநர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இம்முகாமில் கலந்து கொண்டு சிறந்ததொரு வேலைவாய்ப்பினை சேலம் மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் வேண்டும். மேலும், விவரங்களை www.tnautoskills.org/registration என்ற இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் 9445158093 மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.</p>