ARTICLE AD BOX

அமெரிக்காவில் வசித்து வருபவர் கிறிஸ்டினோ மூர்ரே (38). இவர் ஒரு அமெரிக்க கருவுறுதல் மருத்துவமனையில் IVF மூலம் செயற்கை கருத்தரித்தல் முறை செய்துள்ளார். இதில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியிலிருந்த முர்ரே சிறிது நாட்களில் தனது கருவுறுதலில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தார். இதனால் பிரசவத்திற்கு பின் அவர் ஒரு மரபணு பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அதில் அவருடைய குழந்தைக்கும் அவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளார். அவரது குழந்தை அவரது மரபணு ரீதியான குழந்தை அல்ல என்பதைத் தெரிந்து கொண்டார். இதனால் அவர் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். அதன் பின் மருத்துவமனை குழந்தையின் உயிரியல் ரீதியான பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் உயிரியல் ரீதியான பெற்றோருக்கு பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்ப்பளிக்கப்பட்டது. சில மாதங்கள் கடந்த பின் முர்ரே தானாக முன்வந்து குழந்தையை உயிரியல் ரீதியான பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் முர்ரே சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறியதாவது, கிறிஸ்டினா முர்ரே ஒரு காகசியன் பெண். அவர் அது போன்ற தோற்றமுடைய விந்தணு தானம் செய்பவரை தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் அவருக்கு பிறந்த குழந்தை ஆப்பிரிக்க அமெரிக்கன். இதுபோன்ற தவறுகள் ஒரு கருவுறுதல் மருத்துவமனையில் ஒருபோதும் நிகழக் கூடாது. இது ஒரு மிகப்பெரிய பாவமாகும் என வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு மருத்துவமனை சார்பில், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.