ARTICLE AD BOX
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே விளங்குகிறது. சிஎஸ்கே அணிக்காக பல மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் விளையாடுவதன் மூலம் அவர்கள் தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாக மாறி இருக்கிறார்கள்.
ஆனால் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வெளிநாட்டு வீரர் ஒருவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் என்றால் அது நமது இலங்கை வீரர் பதிராணா தான். பதிரானா உடைய அபாரமான வேகப்பந்து வீச்சும் மூலம் எதிரணி வீரர்களை நெருக்கடிக்கு ஆளாக்குவார்.

தன்னுடைய பந்துவீச்சு ஸ்டைல் மலிங்கா போல் வித்தியாசமாக இருப்பதால், அதனை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பதிராணா மிகவும் முக்கிய பங்கு ஆற்றுகிறார்.பதிரானா கொஞ்சம் க்யூட் ஆகவும் இருப்பதால், அவருக்கு பல பெண் ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொலைக்காட்சி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நேகா என்ற நடிகை நடித்து வருகிறார்.
அண்மையில் நேஹா, அந்த சீரியலில் நடனமாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது. இந்த நிலையில் தான் நேஹா, இலங்கை வீரர் பதிரானவை காதலிப்பதாகவும், இருவரும் அடிக்கடி சந்தித்து டேட்டிங் செய்வதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது ஐபிஎல் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இதனால் நேஹாவும், பதிரானாவும் ஆகும் சென்னையில் சந்திப்பதாக மீண்டும் இணையத்தில் செய்திகள் வெளியானது. எனினும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள விஜய் டிவி நடிகை நேஹா, தாம் யாரையும் காதலிக்கவில்லை என்றும், பதிராணாவுடன் தம் காதலில் இருப்பதாக கூறும் செய்தி பொய் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இதேபோன்று தமது பெயர் வேறு ஒரு நடிகருடன் சேர்த்து பேசப்படுவதாகவும், அதிலும் உண்மை இல்லை என்றும் நேஹா விளக்கம் அளித்துள்ளார். எனினும் இந்த செய்தியை நம்பாத ரசிகர்கள் வரும் ஐபிஎல் தொடரில் நேஹா சேப்பாக்கம் மைதானத்தில் வருவாரா இல்லையா என்று பேசி வருகின்றனர்.