ARTICLE AD BOX
மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் மெகா ஏலத்திற்கு பின்பு ஒவ்வொரு அணியிலும் பல அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கிறது.
இதனால் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ராயுடு, மும்பை அணி பிளேயிங் லெவன் குறித்து தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

தொடக்க வீரராக ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ள அம்பத்தி ராயுடு, அவருக்கு ஜோடியாக தென்னாப்பிரிக்கா வீரர் ரியான் ரிக்கல்டனை தேர்வு செய்து இருக்கிறார். இதுபோன்று மூன்றாவது வீரராக திலக் வர்மாவையும், நான்காவது வீரராக சூரியகுமார் யாதவையும் ராயுடு தேர்வு செய்துள்ளார்.
நடு வரிசையில் ஹர்திக் பாண்டியா நமன் திர், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரை தேர்வு செய்துள்ள ராயுடு, மூன்று வேகப் பந்துவீச்சார்களாக பும்ரா, டிரெண்ட் பவுல்ட் மற்றும் தீபக்சாகர் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார். ராயுடு 11 வது வீரர் யார் என்பதை குறிப்பிடவில்லை. இது குறித்து தெரிவித்துள்ள அவர், மும்பை அணி ஏதேனும் ஒரு இளம் வீரரை ஒவ்வொரு சீசனிலும் கண்டுபிடித்து வாய்ப்பு வழங்கும்.
அந்த வகையில் அந்த 11 வது வீரர் குறித்து மும்பை அணியே முடிவு செய்யும் என்று ராயூடு கூறியுள்ளார். ராயுடு தன்னுடைய அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. மும்பை அணி தங்களுடைய முதல் போட்டியில் மார்ச் 23ஆம் தேதி சிஎஸ்கே அணியையும், அதன் பிறகு மார்ச் 29ஆம் தேதி குஜராத் அணியையும் எதிர்கொள்கிறது. மார்ச் 31ஆம் தேதி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் போட்டியில் விளையாடும் மும்பை அணி நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
மும்பை அணி விவரம் : ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ன் ஷர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, வெங்கட் அன்கனாரயன கிருஷ்ணன், வெங்கட் அன்கனாரயன கிருஷ்ணன், பி. அர்ஜுன் டெண்டுல்கர், விக்னேஷ் புதூர், கார்பின் போஷ்