ARTICLE AD BOX
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை ஆர்சிபி அணி துவம்சம் செய்திருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர் சி பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய கே கே ஆர் அணியின் குயின்டன் டிகாக் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுனில் நரைன், ரகானே அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சுனில் நரைன் வழக்கம் போல அதிரடி காட்டி ஐந்து பவுண்டரி, மூன்று சிக்சர் என 26 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.இதேபோன்று கேப்டன் ரஹானே 31 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்சர் அடங்கும். இம்பேக்ட் வீரராக வந்த ஆங்கிரிஸ் ரகுவான்சி 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், 12 ரன்களும், ஆண்டிரூ ரசூல் நான்கு ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார்.
இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ந்து வீச்சு தரப்பில் ஆர்சிபி அணியின் குர்னல் பாண்டியா 29 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக விளையாடுகிற பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் அபாரமாக விளையாடினர்.
பில் சால்ட் 31 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தால் இதில் ஒன்பது பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்ற விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும்.
படிக்கல் 10 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த இறுதியில் லிவிங்ஸ்டோன் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் rcb அணி 16.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்கள் எட்டியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே கே ஆர் அணியில் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.