ARTICLE AD BOX
IPL 2025 CSK: ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகள், சாம்பியன்ஸ் லீக் தொடரில் இரண்டு கோப்பைகள் என மொத்தம் ஏழு முறை சாம்பியன்ஷிப்பை வென்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது.
IPL 2025 CSK: ருதுராஜ் கெய்க்வாட்டின் சிஎஸ்கே அணி
இந்த ஏழு கோப்பைகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்எஸ் தோனி தலைமையில் கைப்பற்றியதாகும். ஆனால், கடந்த சீசனில் தோனி அவரது கேப்டன்சியை ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார் அந்த வகையில், இரண்டாவது ஆண்டாக ருத்ராஜ் சிஎஸ்கேவை வழிநடத்த இருக்கிறார். இதன்மூலம் அவர் மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது எனலாம்.
கடந்தாண்டாவது, எம்எஸ் தோனி தேர்ந்தெடுத்த வீரர்களை வைத்துக்கொண்டு ருத்ராஜ் கெய்க்வாட் தொடரை விளையாடினார் என கூறப்பட்டது. ஆனால், இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் - ஸ்டீபன் பிளமிங் கூட்டணி தீர்மானித்த வீரர்களையே சிஎஸ்கே அணி நிர்வாகமும் எடுத்து இருக்கிறது எனலாம்.
IPL 2025 CSK: அஸ்வின் எடுக்க காரணம் என்ன?
அந்த வகையில் இந்த முறை பழைய சிஎஸ்கே வீரர்களும் அணிக்குள் வந்திருக்கின்றனர். அதாவது, சாம் கரன், விஜய் சங்கர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இதற்கு முன் சிஎஸ்கேவில் இருந்தனர். இதில் அஸ்வினை சிஎஸ்கே அணி சுமார் ரூ.9.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சண்டையிட்டு கொத்தி தூக்கியது எனலாம்.
அஸ்வினை சிஎஸ்கே எடுக்கும் என்பது நிச்சயம் பலருக்கும் தெரியும். ஆனால், இவ்வளவு தொகை கொடுத்து, இவ்வளவு ஆர்வத்துடன் எடுப்பார்கள் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். அதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. அஸ்வின் சென்னை பையன் என்ற சென்டிமெண்ட்கள் தாண்டி அவர் சமீபத்தில் பேட்டிங்கில் சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளார், சிறப்பான பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.
IPL 2025 CSK: அஸ்வினுக்கு சிறப்பான ரோல் காத்திருக்கு...
டிஎன்பிஎல் தொடரில் ஓப்பனிங்கில் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அஸ்வின். சேப்பாக்கத்தை அங்குலம் அங்குலமாக தெரிந்தவர் வேறு. இதையெல்லாம் கணக்கிட்டுதான் அஸ்வினை சிஎஸ்கே தூக்கியிருக்கிறது. அந்த வகையில், இந்த சீசனில் அவருக்கு சிறப்பான ரோல் இருக்கிறது எனலாம்.
IPL 2025 CSK: முதல் ஓவரை வீசுவாரா அஸ்வின்?
தோனி அஸ்வின் முன்பு பயன்படுத்துவதை போல், ஓப்பனிங்கில் இடது கை பேட்டர் இருந்தால் முதல் ஓவரிலேயே அவர் பந்துவீச வரலாம். சாம் கரன், கலீல் அகமது ஆகியோருடன் பவர்பிளேவில் அஸ்வினின் தாக்குதலும் சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு கைக்கொடுக்கும். சுழற்பந்துவீச்சுக்கு சாதகம் இல்லாத ஆடுகளத்திலும் அஸ்வினின் ஓவர் ஸ்பின் பேட்டர்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்கலாம். ஜடேஜா, நூர் அகமது ஆகியோர் மிடில் ஓவர்களில் எதிரணி பேட்டர்கள் மீது அழுத்தத்தை போடும்போது அஸ்வினும் உதவிக்கு வருவார்.
மேலும் படிக்க | CSK: ருத்ராஜ் உடன் ஓப்பனிங்கில் இறங்கப்போவது யாரு...? சிஎஸ்கே கப் அடிக்க ஒரே வழி!
IPL 2025 CSK: டாப் ஆர்டரில் ஆடுவாரா அஸ்வின்?
பேட்டிங் ஆர்டரில் ஒருவேளை நம்பர் 3 சரியாக செட்டாகாதபட்சத்தில் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3இல் இறங்கி, அஸ்வின் ஓப்பனிங் வந்து சில பவுண்டரிகளை பறக்கவிடவும் வாய்ப்புள்ளது. அதாவது இதற்கான வாய்ப்பு 1% தான். ஏனென்றால் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கெய்க்வாட் என 3 சிறப்பான ஓப்பனர்கள் இருக்க, நம்பர் 3இல் ராகுல் திரிபாதி போன்ற அனுபவமிக்கவர் இருக்க அஸ்வின் டாப் ஆர்டரில் வருவது இயலாத காரியம்தான். இருப்பினும் இதற்கும் வாய்ப்பிருக்கிறது எனலாம்.
IPL 2025 CSK: அஸ்வின் எனும் ஆயுதம்
கடந்தாண்டுகளில் ஜடேஜாவுக்கு முன்கூட்டியே தோனி பேட்டிங் விளையாட வந்தார். எனவே, இந்த முறையும் அஸ்வினுக்கு நம்பர் 8 அல்லது நம்பர் 9இல் தான் பேட்டிங் கிடைக்கலாம். ஒருவேளை வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தால், பேட்டிங்கை சரிவில் இருந்து மீட்கும் ஆயுதமாகவும் அஸ்வின் பயன்படுத்தப்படலாம். நிச்சயம் ருதுராஜிற்கு பெரியளவில் அஸ்வின் உதவப்போகிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அஸ்வின் இந்த தொடரில் ஜொலித்துவிட்டால், நிச்சயம் சிஎஸ்கே அதன் 8வது சாம்பியன்ஷிப்பையும், 6வது ஐபிஎல் கோப்பையையும் தூக்கும்.
மேலும் படிக்க | IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் அதிரடி ஓப்பனர்கள் யார் யார்? பட்டையை கிளப்பும் லிஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ