ARTICLE AD BOX
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் 17 சீசன்கள் விளையாடியும், திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் அதிக அளவு ரசிகர்கள் படை இருந்தும், ஒரு அணி தொடர்ந்து தோல்வியை தழுவுகிறது என்றால் அது ஆர் சி பி அணி தான். ஆர்சிபி அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது.
இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய சதாப் ஜக்காத்தி, அந்த அணி ஏன் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறித்து பேசி இருக்கிறார்.

சதாப் ஜக்காத்தி முதலில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றினார். அதன் பிறகு அவர் ஆர்சிபி அணிக்கு சென்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. நீங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும்.
வெறும் இரண்டு, மூன்று வீரர்கள் மட்டும் நன்றாக விளையாடினால் உங்களால் கோப்பையை வெல்ல முடியாது. சிஎஸ்கே அணியில் பலம் வாய்ந்த இந்திய வீரர்களும் சிறப்பாக செயல்படக்கூடிய வெளிநாட்டு வீரர்களும் இணைந்து விளையாடினார்கள். ஒரு அணி வெல்ல வேண்டும் என்றால் சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் நான் ஆர் சி பி அணியில் இருக்கும் போது அணி நிர்வாகம் வெறும் இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டும் தான் கவனிப்பார்கள்.
அணி நிர்வாகம் சிஎஸ்கே அணி உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆர் சி பி அணியில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. வீரர்கள் அனைவரும் நன்றாகத் தான் இருப்பார்கள். ஆனால் ஆர் சி பி வீரர்களுக்கு மத்தியில் நட்புணர்வு பெரிய அளவு இருக்காது. அனைத்து வீரர்களும் தனித்தனியாக தானே இருப்பார்கள். தவிர ஒருவர் உடல் ஒருவர் கலக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.
அவர்கள் ஒவ்வொரு வீரர்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். இது போன்ற சில விஷயங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.சிஎஸ்கேவுக்கும் ஆர்சிபிக்கும் இந்த வித்தியாசத்தை தான் நான் பார்க்கின்றேன்.
தோனி மட்டும் கேப்டனாக இல்லை என்றால் நான் இவ்வளவு காலம் கிரிக்கெட் விளையாடி இருக்க முடியாது.தோனி ஒவ்வொரு வீரர்களுக்குமே துணையாக நிற்பார். நான் பார்த்ததிலே தோனி தான் சிறந்த கேப்டன் என்று சதாப் ஜக்காத்தி தெரிவித்துள்ளார்.