ARTICLE AD BOX
பெங்களூர்: ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விராட் கோலிக்கு தவம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையில் 18 வது சீசனில் மீண்டும் "ஈ சாலா கப் நம்தே" என்ற முழக்கத்துடன் ஆர்சிபி அணி களமிறங்கி இருக்கிறது.ஆர் சி பி அணி ஏலத்திற்கு முன்பு பல வீரர்களை விடுவித்ததால், தற்போது புதிய வீரர்களை கொண்டு களம் இறங்கியுள்ளது.
தற்போது ஆர் சி பி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டிருக்கிறார் .இவருக்கு உள்ளூர் போட்டியில் கேப்டன்ஷி செய்த அனுபவம் இருக்கிறது. மேலும் கோலி தான், இவருடைய பெயரை கேப்டன் பதவிக்கு முன்மொழிந்து இருக்கிறார். மேலும், ரஜத் பட்டிதார் பற்றி மிகப் பெருமையாகவும் பேசி இருக்கிறார்.

தற்போதைய ஆர் சி பி அணியில் விராட் கோலி, தேவுதட் படிக்கல், லிவிங்ஸ்டோன், குர்னல் பாண்டியா, டிம் டேவிட், பில் சால்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். இது நிச்சயம் ஆர்சிபி அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இதே போன்று பந்துவீச்சிலும் ஹேசல்வுட், புவனேஸ்வர் குமார் என இரண்டு அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். கூடுதலாக யாஷ் தயால், ராசிக் தர் போன்ற இளம் வீரர்களும் உள்ளனர்.
ஆர் சி பி அணியில் குறை என்று பார்த்தால் சாஹல் போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் இல்லாததுதான். கேகேஆர் அணிக்காக விளையாடிய சுயாஷ் ஷர்மா, ஆல்ரவுண்டர்கள் ஸ்வாப்னில் சிங், குர்னல் பாண்டியா மட்டும்தான் இருக்கிறார்கள். இதில்,
ஆர் சி பி அணியின் X Factor ஆக குர்னல் பாண்டியா, ஸ்வாப்னில் சிங் ஆகியோர் இருப்பார்கள்.
இந்த இருவரும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் ஆர் சி பி அணி பலமான அணியாக விளங்கும். ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட், பில் சால்ட் போன்ற வீரர்கள் தங்களுடைய அதிரடியை காட்ட வேண்டும். விராட் கோலி பொறுத்தவரை ஆங்கர் ரோல் செய்தாலும், தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.
ஆர்சிபி பிளேயிங் லெவன்: 1.பில் சால்ட், 2, விராட் கோலி, 3, ரஜத் பட்டிதார்,4, தேவுதட் படிக்கல், 5, லியாம் லிவிங்ஸ்டோன், 6. குர்னல் பாண்டியா, 7, டிம் டேவிட், 8, ஸ்வாப்னில் சிங், 9, ஹேசல்வுட், 10. புவனேஸ்வர் குமார், 11,ராசிக் தர்/ யாஷ் தயால், 12. ஜித்தேஷ் சர்மா( இம்பேக்ட் வீரர்)