ARTICLE AD BOX
டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராகுல் டெல்லி அணிக்காக விளையாட போகிறார். லக்னோ அணியுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக கேஎல் ராகுல் அந்த அணியை விட்டு வெளியேறினார். இந்த நிலையில், ராகுலை 14 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.
இந்திய அணியில் தற்போது ராகுல் மிகவும் முக்கியமான வீரராக மாறி இருக்கிறார். மேலும் முதன்மை விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டை விட ராகுலுக்கு தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ராகுல் அபாரமாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த சூழலில் தொடக்க வீரராக அறியப்பட்ட ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் நடுவரிசையில் விளையாடி வருகிறார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ராகுல் எப்போதுமே தொடக்க வீரர் என்ற இடத்தில் தான் விளையாடுவார். இதன் மூலம் ராகுல் அதிக ரன்களை குவிப்பார்.பல சமயம் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் அவருக்கு பிரச்சனையை கொடுத்தாலும், ஐபிஎல் வரலாற்றில் நான்கு சீசனில் 600 ரன்களுக்கு மேல் கோலிக்கு பிறகு அடித்த ஒரே வீரர் என்ற பெயரை ராகுல் மட்டும்தான் பெற்று இருக்கிறார்.
இதனால் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவது தான் சரியாக இருக்கும். இந்த நிலையில் டெல்லி அணியில் தொடக்க வீரர் டுபிளசிஸ், அபிஷேக் போரெல் விளையாடப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தற்போது அணியை விட்டு சென்றிருப்பதால் ராகுல் நடுவரிசையில் களமிறங்க அக்சர் பட்டேலை அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
ராகுல் இதுவரை வெறும் 33 போட்டிகளில் தான் தொடக்க வீரராக களமிறங்காமல் மற்ற இடங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். இதில் மொத்தமாகவே அவர் 500 ரன்களை அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 29.41 ஆகும் 117 என்று அளவில் தான் ஸ்ட்ரைக் ரேட் இருந்திருக்கிறது.
இதனால் ராகுல் டி20 கிரிக்கெட்டில் நடுவரிசையில் விளையாடினால் ரன்கள் சேர்க்க தடுமாறுவார். தமக்கு தொடக்க வீரர் என்ற இடம் கிடைக்கும் ,அதில் எந்த ஒரு நெருக்கடியும் இன்றி அதிரடியாக விளையாடலாம் என்ற நினைப்பில் ராகுல் இருந்த சூழலில் தற்போது அவருக்கு இந்த செய்தி பெரிய இடியை கொடுத்திருக்கிறது.