ARTICLE AD BOX
மும்பை : ஐபிஎல் 2020ஆம் ஆண்டு சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கின்றது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டனின் பங்கு மிகவும் முக்கியமாகும்.
இதன் காரணமாக ஒவ்வொரு அணியிலும் பெரிய சம்பளம் வாங்கும் வீரர்களை தான் கேப்டனாக நியமிப்பார்கள். அந்த வகையில் நடப்பு தொடரில் யார் குறைந்த சம்பளம் வாங்குகிறார்கள்? எந்த கேப்டன் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதை பார்க்கலாம்.

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் கே கே ஆர் அணியின் கேப்டன் ரஹானே தான், ஐபிஎல் தொடரில் குறைந்த சம்பளம் வாங்கும் கேப்டன் என்ற பெயரை இவர் பெற்று இருக்கிறார். ரஹானே ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலைக்கு கேகேஆர் அணியால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆர் சி பி அணியின் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார்.
2022 ஆம் ஆண்டு வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்ட ரஜத் பட்டிதார், தற்போது 11 கோடி ரூபாய் பெற்று கேப்டனாக வளர்ந்திருக்கிறார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பெற்றிருக்கிறார். ஹர்திக் பாண்டியா 16 கோடியே 35 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.
இந்த பட்டியலில் ஏழாம் இடத்தில் சுப்மன் கில் இருக்கின்றார். குஜராத் அணியின் கேப்டனாக செயல்படும் கில் 16 கோடியே 50 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார். அதில் 2022 ஆம் ஆண்டு இருந்து 2024 ஆண்டு வரை 8 கோடி ரூபாயை சம்பளமாக பெற்ற நிலையில் தற்போது அவருடைய சம்பளம் அதிகரித்து இருக்கிறது.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் அக்சர் பட்டேல் பெற்றிருக்கிறார்.அக்சர் பட்டேல் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறுகிறார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு, சாம்சன் இருக்கின்றார். சஞ்சு சாம்சன் 18 கோடி ரூபாய் சம்பளம் பெற்று கேப்டனாக செயல்பட உள்ளார். அவர் கடந்த நான்கு சீசனாக கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் செயல்படுகிறார். ருதுராஜ் 18 கோடி ரூபாய் சம்பளத்தை பெறுகிறார். சிஎஸ்கே அணிக்கு 2020 ஆம் ஆண்டு தான் அறிமுகமான நிலையில் நான்கே ஆண்டுகளில் அவர் கேப்டனாக உயர்ந்திருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கின்றார்.
பாட் கம்மின்ஸ் 18 கோடி ரூபாய் சம்பளத்தை பெறுகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருக்கும் ஒரே வெளிநாட்டு வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கின்றார். கே கே ஆர் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வாங்கி கொடுத்ததால் ஸ்ரேயாஸ் மதிப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.இதன் மூலம் அவர் 26 கோடியே 75 லட்சம் சம்பளத்தை பெறுகிறார். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் லக்னோ அணிக்கு புதியதாக வந்திருக்கும் ரிஷப் பன்ட் 27 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.