IPL 2025- இனி பல ஆண்டுகளுக்கு இவர் தான் RCB கேப்டன்.. உங்கள் அன்பை கொடுங்க.. விராட் கோலி உருக்கம்

1 day ago
ARTICLE AD BOX

IPL 2025- இனி பல ஆண்டுகளுக்கு இவர் தான் RCB கேப்டன்.. உங்கள் அன்பை கொடுங்க.. விராட் கோலி உருக்கம்

Published: Tuesday, March 18, 2025, 9:47 [IST]
oi-Javid Ahamed

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டிருக்கிறார். டுபிளசிஸ் டெல்லி அணிக்கு சென்ற நிலையில், ஆர்சிபி அணி நிர்வாகம் விராட் கோலியை கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் ஆர் சி பி அணியின் புதிய கேப்டன் அறிமுக நிகழ்ச்சி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதனை 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர்.

RCB unbox event

அப்போது புதிய கேப்டன் ரஜத் பட்டிதாரை விராட் கோலி அறிமுகப்படுத்தி பேசினார். அதில், "ஆர் சி பி அணியின் அடுத்த கேப்டனாக வரப்போகிறவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த அணியை வழி நடத்துவார். எனவே உங்களின் அன்பை வழக்கம் போல் ரஜத் பட்டிதாருக்கு கொடுங்கள். ரஜத் ஒரு பிரமாதமான திறமை உடைய வீரர். ரஜத்துக்கு மிகப்பெரிய பொறுப்பு தற்போது காத்திருக்கிறது."

"அதை ரஜத் சிறப்பாக செய்வார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த சிறப்பான அணியை அவர் முன்னோக்கி அழைத்துச் செல்வார். ஒரு வெற்றிகரமான கேப்டனாக என்ன வேண்டுமோ அது அனைத்தும் ரஜத்திடம் இருக்கின்றது. இம்முறை எங்கள் அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். சில வீரர்களை நினைக்கும்போது என்னுடைய எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது."

"பல திறமையான வீரர்கள் அணியில் இருப்பதால் அவர்களுடன் இணைந்து விளையாட நான் ஆர்வமாக இருக்கின்றேன். அணியின் வெற்றிக்கு கண்டிப்பாக உதவுவேன். பல ஆண்டுகளாக நான் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டேனோ, அதேபோல் இம்முறையும் செயல்படுவேன். பெங்களூரில் வந்து விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்."

"இந்த அழகான நகரத்துக்கு திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். உங்களை பார்க்கும் போது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இங்கு நான் 18 ஆண்டுகளாக வந்து விளையாடுகின்றேன். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று கூறி கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய கேப்டன் ரஜத் பட்டிதார் "தான் சிறுவயிலில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் விளையாடுவதை பார்த்து வளர்ந்தவன். நான் இன்று அந்த அணிக்கு தலைமை தாங்குவதற்கு மகிழ்ச்சி கொள்கின்றேன். எனக்கு மிகவும் பிடித்த அணி இது" என்று ரஜத் பட்டிதார் கூறியுள்ளார்.

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, March 18, 2025, 9:47 [IST]
Other articles published on Mar 18, 2025
English summary
IPL 2025- Virat Kohli Lauds New Captain Rajat Patidar in RCB unbox Event
Read Entire Article