IPL 2025: இந்த 4 அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

1 day ago
ARTICLE AD BOX

IPL 2025: இந்த 4 அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

Published: Monday, March 17, 2025, 23:53 [IST]
oi-Javid Ahamed

உலகின் மிகவும் கடினமான கிரிக்கெட் தொடராக ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மற்ற தொடர்களில் மொத்தமாகவே 6 அணிகள் அல்லது ஏழு அணிகள் தான் இருக்கும். அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்க வேண்டும் என்ற நிலை இருக்கும். ஆனால் ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் இருக்கிறது.

ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் வெறும் நான்கு அணிகளால் மட்டுமே முடியும். இதனால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இதனால் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்கிறது என்பதே கணிக்க முடியாது.

IPL Playoff

இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சதாப் ஜகாத்தி, ஐபிஎல் பிளே ஆப் சுற்றி எந்த அணி தகுதி பெறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் என்னை பொருத்தவரை, கொல்கத்தா அணி கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும்.

இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. மேலும் குஜராத் அணியும் நல்ல பலமான அணியாக தெரிகிறது. இதன் மூலம் கொல்கத்தா, சென்னை குஜராத் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து விடும். நான்காவது அணியாக லக்னோ அல்லது டெல்லி இருக்கும் என நினைக்கின்றேன்.

ஏனென்றால் டெல்லி அணி இம்முறை நல்ல வீரர்களை தேர்வு செய்கிறார்கள். இதன் காரணமாக டெல்லி அணி நமக்கு இம்முறை ஆச்சரியத்தை கொடுக்கும் என நினைக்கின்றேன். இந்த சீசனில் பல அணிகள் நல்ல வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் நல்ல முறையில் ஹோம் ஒர்க் செய்து மெகா எல்லத்தில் வீரர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

காகிதத்தில் பார்த்தால் அனைத்து அணிகளும் பலமாக இருக்கிறது. என்னைக் கேட்டால் இம்முறை டெல்லி அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நினைக்கின்றேன். ஆர் சி பி அணி இம்முறை நன்றாக செயல்படும் என நினைக்கின்றேன். கோலி பல ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு விளையாடி இருக்கிறார். அவர் கோப்பையுடன் செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இம்முறை விராட் கோலி தான் ஆரஞ்சு தொப்பியை வெல்வார்.இல்லையென்றால் ரோகித் சர்மா வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று அதிக விக்கெட் எடுக்கும் வீரராகும். இல்லையென்றால் குல்தீப் யாதவ் அல்லது சாகல் போன்றவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று சதாப் ஜக்காத்தி கூறியுள்ளார்.

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, March 17, 2025, 23:53 [IST]
Other articles published on Mar 17, 2025
English summary
IPL 2025: இந்த 4 அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து
Read Entire Article