Interview: "ஏன், ஜென்டில்வுமன் இருக்க கூடாதா?" - சீறும் லிஜோ மோல் ஜோஸ்!

6 days ago
ARTICLE AD BOX

"லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்று சொல்கிறோம். ஏன் ஜென்டில்வுமன் என்று சொல்ல கூடாது? இந்த கேள்விக்கான பதிலை சொல்லும் படம் தான் ஜென்டில்வுமன்," என்கிறார் லிஜோ மோல் ஜோஸ்.

இரண்டாண்டுகளுக்கு முன் வெளியான ஜெய் பீம் படத்தில் ஒரு லைவ் கேரக்டரில் வாழ்ந்து காட்டியவர்; சென்ற வாரம் வெளியான 'காதல் என்பது பொதுவுடைமை' படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்து சபாஷ் போட வைத்திருக்கிறார் லிஜோ. இவரின் மாறுபட்ட நடிப்பில் ஜென்டில்வுமன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை வந்திருந்த லிஜோ, நம் கல்கி ஆன்லைன் இதழுக்கு அளித்த நேர்காணல்....

Q

சொல்லி அடிக்கிறீங்களே... செலக்டிவா கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது போல தெரிகிறதே?

A

நான் கதையை செலக்ட் பண்றது இல்லை. கதையில் என் கேரக்டர் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது, நடிப்புக்கு என்ன ஸ்கோப் இருக்குன்னு பார்ப்பேன். என் நடிப்புக்கு தீனி போடும் கதையில் மட்டும் நடிக்கிறேன்.

Q

இந்த ஜென்ட்டில்வுமன் யார்?

A

இன்றைய மாடர்ன் உலகில் Women empowerment, பற்றி பேசுகிறோம். இன்றைய சூழ்நிலையில், ஆணுக்கு நிகராக அல்ல, ஆண்களை விட பல படங்கு அதிகமாக உழைக்கிறார்கள் பெண்கள். சாதிக்கிறார்கள். இருந்தாலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் பல இடங்களில் இல்லை. இதை உணர்ந்த படத்தின் டைரக்டர் ஜோஷ்வா சேதுராமன் ஜென்டில்மேன் இருந்தால் கண்டிப்பாக ஜென்டில்வுமனும் இருப்பார் என்று இந்த டைட்டிலை வைத்திருக்கிறார்.

Q

இது பெண்ணியம் பேசும் படமா?

A

இல்லை. இது இரண்டு பெண்களை பற்றி பேசும் படம். இரண்டு பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் தருணங்களை மெல்லிய உணர்வில் சொல்லும் கதை. இன்னொரு பெண்ணாக லாஸ்லியா நடிக்கிறார்.

Q

உங்கள் இருவரில் டைட்டிலுக்கு சொந்தக்காரர் யார்?

A

படம் பாருங்கள் அது சஸ்பென்ஸ்.

Q

காதல் என்பது பொதுவுடைமை படத்தில் தன் பாலின ஈர்ப்பாளாராக உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது. என்ன ஹோம் ஒர்க் செய்தீர்கள்?

A

என் நண்பர்களில் ஒரு சிலர் இப்படி இருப்பதை பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் என்னையும், நந்தினி கேரக்டரில் நடித்த அனுஷாவையும், மாலினி என்ற சமூக ஆர்வலரை சந்திக்க ஏற்பாடு செய்தார். மாலினி அவர்களிடம் பேசியதன் மூலமாக தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி தெரிந்து கொண்டேன். ஸ்பாட்டில் டைரக்டர் சொல்லியதை உள்வாங்கி அப்படியே நடித்தேன்.

Q

சென்சிடிவான 'தன் பாலின ஈர்ப்பு' விஷயத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

A

படத்தில் சொன்ன அன்பு என்ற கருத்துதான் என் கருத்தும். காதல் என்பது பொதுவுடைமை படத்தில் ஆண் பெண் அன்பு, பெற்றோர்கள் மீது வைக்கும் அன்பு, தன் பாலினத்தவர் மீதான அன்பு என அன்பின் அனைத்து அம்சங்களும் பேசப்பட்டுள்ளன. தன் பாலின ஈர்ப்பாளர்களும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துகிறார்கள். இவர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். இதை அன்பின் வெளிப்பாடாக பார்க்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

Q

நீங்கள் இது போன்ற மாறுபட்ட கேரக்டரில் நடிக்கும் போது உங்கள் வீட்டில் இருப்பவர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?

A

என் வீட்டில் இருப்பவர்கள் நான் நடிக்கும் கேரக்டர் பற்றி தெரிந்து கொள்வார்கள். மற்றபடி நான் நடிக்கும் படங்களை பற்றிய முடிவை நான்தான் எடுப்பேன். நான் நடித்த படங்களை பார்த்து விட்டு என் வீட்டில் இருப்பவர்கள் பாராட்டவே செய்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
Interview: பாரதிராஜா, பாலசந்தர் போல் சிந்திக்கும் இயக்குனர் சுசீந்திரன்!
Lijomol Jose interview
Q

உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு எது?

A

ஜெய்பீம் படம் வந்த சமயத்தில் ஒரு ரெஸ்டாரன்டில் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த ஒரு இளம் பெண் " நீங்கதானே ஜெய் பீம் படத்தில் நடித்தது உங்க நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது உங்களை ஒரு நிமிடம் கட்டி பிடித்து கொள்ளவா? என்று சொல்லி விட்டு என் அனுமதியுடன் என்னை கட்டி தழுவிக்கொண்டார். அந்த நிமிடமும், பாராட்டும் என்னால் மறக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
Interview: "என் யதார்த்த நடிப்புக்கு அடித்தளம் மதுரை மாநகரமே!" - குரு சோமசுந்தரம் நெகிழ்ச்சி!
Lijomol Jose interview
Q

பெண்ணுரிமை பற்றி உங்கள் கருத்து என்ன?

A

பெண்ணுரிமை, சுதந்திரம் எல்லாம் கேட்டு பெறுவதில்லை. யாரும் தர வேண்டியதும் இல்லை.எங்களுக்கானதை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

இதையும் படியுங்கள்:
Interview: "என் சொந்த வாழக்கையில் நடந்ததைதான் குறும்படமாக எடுத்துள்ளேன்" - தேவயானி!
Lijomol Jose interview
Q

உங்களுக்கு பிடித்த ஹீரோயின்?

A

சாய் பல்லவி

Q

பிடித்த ஹீரோ?

A

மோகன்லால்.

Read Entire Article