இந்தியா போஸ்ட் சார்பில் இந்திய அஞ்சலகத் துறை ஜிடிஎஸ் எனப்படும் கிராமின் தக் சேவக் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது. அதில், மெரிட் பட்டியல் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் indiapostadsonline.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

நாடு முழுவதும் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், ஊரக அஞ்சல் ஊழியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. 18 முதல் 40 வயது வரையிலான தேர்வர்கள் இதில் கலந்துகொண்டனர். 21,413 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 2,292 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு முறை எப்படி?

இந்தக் காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கம்யூட்டர் உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுவார்கள்.

பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால் பத்தாம் வகுப்பு தேர்வில் 460-க்கு மேல் எடுத்திருந்தால். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வேறு தகுதி அவசியமா?

அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டு வேலை செய்த முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் இந்தப் பணிக்கு விண்ணப்பித்தனர்.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி? (India Post GDS Recruitment 2025 Result)

தேர்வர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள “GDS Result/Merit List" என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்.

கடவுச்சொல் மற்றும் பதிவு எண்ணை உள்ளிடவும்.

சப்மிட் பொத்தானை அழுத்தவும்.

தேர்வு முடிவு திரையில் தோன்றும். அதைக் கொண்டு அறியலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://indiapostgdsonline.gov.in/