ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி துபாயில் இன்று நடைபெற உள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், தனது 2வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா இன்று எதிர்கொள்கிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும். அதே வேளையில் இது பாகிஸ்தானுக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாகும். இந்த போட்டியில் தோற்றால் தொடரை விட்டு வெளியேறிவிட வேண்டியது தான்.

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பலம் வாயந்ததாக உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலியை தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ரோகித் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். சூப்பர் சதம் விளாசிய இன்றும் தனது பார்மை தொடரை காத்திருக்கிறார். கே.எல்.ராகுல், ஷ்ரேயாஷ் ஐயர் நல்ல நிலையில் இருக்கின்றனர்.
பவுலிங்கில் அனுவம்வாய்ந்த முகமது ஷமி வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்சித் ராணா, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வங்கதேசத்துக்கு எதிராக விக்கெட் வீழ்த்தாத குல்தீப் யாதவ்க்கு பதிலாக தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி உள்ளே வருகிறார்.
ஜோஸ் இங்லிஸ் கலக்கல்! இமாலய இலக்கை சேஸ் செய்து வரலாறு படைத்த ஆஸி.!

இதேபோல் பாஸ்ட் பவுலர் ஹர்சித் ராணாவுக்கு பதில் இடதுகை பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, முகமது. ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்.
மறுபக்கம் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக மண்ணை கவ்வியதால் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற கட்டாயத்தில் இருக்கிறது. அந்த அணியில் பாபர் அசாமை தவிர யாரும் பார்மில் இல்லாதது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. கேப்டன் முகமது ரிஸ்வான் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். காயத்தால் தொடரில் இருந்து வெளியேறிய பக்கர் ஜமானுக்கு பதிலாக இமாம் உல் ஹக் அணியில் இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தானின் பெரும் பலவே வலிமையான பாஸ்ட் பவுலிங் தான். ஆனால் முதல் போட்டியில் ஷாகின் ஷா அப்ரிடி, ஹரிஸ் ராப் மற்றும் நசீம் ஷா அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டுமானால் இவர்கள் ஒரசேர ஜொலிக்க வேண்டியது அவசியமாகும். பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், சல்மான் ஆகா, குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது, கம்ரான் குலாம்.
மின்னல் வேக பந்துவீச்சு! ஆஸி.க்கு எதிராக மார்க் வுட் செய்த மிரட்டலான சாதனை!