ARTICLE AD BOX
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி 2025:
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-வது லீக் ஆட்டம், இன்று (பிப்.,23) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை, பொதுமக்கள் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையிலும் இந்த போட்டியை ராட்சத திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.