IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?

2 days ago
ARTICLE AD BOX

துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மந்தமான ரன்ரேட்:

இதன்படி, ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் பவுண்டரிகளாக அடித்து ரன்களை குவிக்கத் தொடங்கினாலும் பாபர் அசாம் 26 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் இமாம் 10 ரன்னில் அவுட்டானார்.

9.2 ஓவர்களில் 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ரிஸ்வான் - செளத் ஷகீல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடி வருகின்றனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இருவரும் இணைந்து நிதானமாக ஆடி வருவதால் பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் மந்தமாகவே நகர்ந்து வருகிறது.

சுழல் தாக்குதல்:

26வது ஓவரில்தான் பாகிஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. இதுவரை 60க்கும் மேற்பட்ட பந்துகள் டாட் பந்துகளாகியுள்ளது. ரோகித் சர்மா சுழற்பந்துவீச்சாளர்களான அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரை மாறி, மாறி பயன்படுத்தி வருகின்றனர்.

கியரை மாற்றிய ரிஸ்வான்:

மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு அதிகமாக ஒத்துழைப்பு தரும் நிலையில், தற்போது ஆட்டத்தில் அதிரடிக்கு முகமது ரிஸ்வான் மாறியுள்ளார். இதுவரை மிகவும் நிதானமாக ஆடி வந்த செளத் ஷகில் - முகமது ரிஸ்வான் இருவரும் தற்போது அடித்து ஆடத் தொடங்கியுள்ளனர்.

இன்னும் 24 ஓவர்கள் இருப்பதால் அடித்து ஆட வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் அணி உள்ளது. பாகிஸ்தான் அணியின் வீரர்களை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ரோகித் சர்மா தடுமாற வைத்து வருகிறார்.

நெருக்கடியில் பாகிஸ்தான்:

முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா என மாறி, மாறி இந்திய பந்துவீச்சாளர்கள் வீசி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, பாண்ட்யா சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு பாகிஸ்தான் அணியில் முன்னேற முடியும். இதனால், கட்டாய வெற்றி பெற வலுவான இலக்கை பாகிஸ்தான் அணி நிர்ணயிக்க வேண்டும். பாகிஸ்தான் அணியில் பாபர் - செளத் ஷகில் ஜோடிக்குப் பின்னர் சல்மான் அகா, தையப் தாஹீர், குஷ்தில் ஷா உள்ளனர். இவர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு எளிதில் முன்னேறிவிடும். இதனால், இந்திய வீரர்களும் இந்த போட்டியில் வெற்றி பெற முழு முனைப்பில் ஆடி வருகின்றனர்.

Read Entire Article