ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்த தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முதல் அணியாக தகுதி பெற்று இருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஏறக்குறைய முதல் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது.
துபாய் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருப்பதால் பேட்டிங் செய்வதை கடினமாக இருக்கிறது. பந்து பேட்டிற்கு வராததால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட முடியாமல் தடுமாறுகின்றனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

இந்த சூழலில் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 20 ரன்களில் வெளியேறினார். ஐந்தாவது ஓவர் முடிவில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க இந்திய அணி 31 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோரில் இருந்தபோது களத்திற்கு விராட் கோலி வந்து இரண்டு மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அபாரமாக சுழற் பந்து வீச்சை வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால் அதையெல்லாம் விராட் கோலி தன்னுடைய அனுபவத்தால் சமாளித்தார். பாபர் அசாம் மாதிரி பந்தை வீணடிக்காமல், விராட் கோலி அதிக அளவு சிங்கிள்ஸ் ஓடினார். இதன் மூலம் எந்த ஒரு அழுத்தத்திலும் சிக்கிக் கொள்ளாமல் விராட் கோலி இருந்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற விராட் கோலி 11 பந்துகளில் சதம் அடித்தார். விராட் கோலி சதம் அடித்த பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமை பார்த்து நான் இருக்கிறேன் என்று கையை காட்டினார். அதன்பின் கேமராவை பார்த்து விராட் கோலி கண்ணடித்தார். பிசிசிஐ யின் புதிய விதியால் மனைவிகள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் விராட் கோலி தனது மனைவிக்கு கண்ணடித்து தன்னுடைய அன்பை பரிமாறிக் கொண்டார். இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அனுஷ்கா சர்மா, உங்களுடைய அன்பை வாங்கிக் கொண்டேன் என்பது போல் கையெடுத்து கும்பிட்டு இதயம் எமோஜி போட்டு நன்றி தெரிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த கண்ணாடிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.