IND vs PAK: இந்தியா முதலில் பவுலிங்! அணியில் என்னென்ன மாற்றம்? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

2 days ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி துபாயில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார. அதன்படி இந்தியா முதலில் பவுலிங் செய்ய உள்ளது. 

இந்திய அணியை பொறுத்தவரை எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக விக்கெட் வீழ்த்தாத குல்தீப் யாதவ்க்கு பதிலாக தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் எடுக்கப்படுவார் என தகவல் பரவியது. இதேபோல் பாஸ்ட் பவுலர் ஹர்சித் ராணாவுக்கு பதில் இடதுகை பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் இடம்பெறுவார் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே அணி மீண்டும் களமிறங்குகிறது. இதன்மூலம் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்:‍ ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி மற்றும் ஹர்சித் ராணா. 

மறுபக்கம் பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்த அணியில் காயம் அடைந்த பகர் ஜமான் சாம்பியன்ஸ் தொடரை விட்டு வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக இமாம் உல் ஹக் அணியில் இடம்பெற்றுள்ளார்.  பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன்:  முகமது ரிஸ்வான் (கேப்டன்), இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், சல்மான் ஆகா, குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது,  தபாப் தாஹிர் 

Read Entire Article