IND vs PAK LIVE Score: 2017 தோல்விக்கு பழி தீர்க்குமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்

2 days ago
ARTICLE AD BOX

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

Advertisment

முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால்,  ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். 

இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. 

Advertisment
Advertisement

இந்தப் போட்டியில் பங்கேற்க துபாய் வந்துள்ள பாகிஸ்தான் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி வீரரான ஃபகார் ஜமான் காயம் காரணமாக விலகியுள்ளார். இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில்  வியாழன் அன்று வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இதற்கிடையில், கராச்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. சாம்பியன் டிராபி தொடரில், இந்த இரு அணிகளும் கடைசியாக 2017 ஆம் ஆண்டில் நடந்த இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டன. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பை முத்தமிட்டது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் களமிறங்கும். ஆனால், வலுவான ஃபார்மில் இருக்கும் இந்தியா அதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கும். அதனால், இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் நேரலையில் பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோஹாட்ஸ்டார் இணையப் பக்கம் மற்றும் ஆப்களில் நேரலையில் பார்க்கலாம் 

 இந்தியா vs பாகிஸ்தான் - இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் 

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது. ஷமி

பாகிஸ்தான்: பாபர் அசாம், இமாம்-உல்-ஹக், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது.

Read Entire Article