ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி 41 ரன்கள் எடுத்த நிலையிலேயே ஆட்டம் இழந்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் அவுட் கேட்காததால் அவர் தப்பினார் என ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நேரலையிலேயே விராட் கோலி செய்த அந்தத் தவறையும், பாகிஸ்தான் வீரர்கள் அவுட் கேட்காதது பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். கவாஸ்கர் தேவையற்ற சர்ச்சையை கிளப்பி இருப்பதாக கோலி ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் 21-வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடிக்கொண்டிருந்தது. அப்போது சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த நிலையில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து வந்தனர்.
அப்போது 21-வது ஓவரின் ஐந்தாவது பந்தை அடித்த விராட் கோலி ஒரு ரன் ஓடினார். அப்போது ஃபீல்டர் பந்தை தூக்கி விராட் கோலி நின்றிருந்த முனையில் இருந்த ஸ்டம்ப் அருகே வீசினார். அந்தப் பந்தை பிடிக்க அருகில் எந்த பாகிஸ்தான் ஃபீல்டரும் இல்லை.
அப்போது திடீரென விராட் கோலி தன் அருகே வந்த பந்தை கையால் தடுத்தார். சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் ஃபீல்டர் பந்தை தூக்கி எறியும்போது பேட்ஸ்மேன் அதை கைகளால் தடுத்தால் அது ரன் அவுட் விதியின் கீழ் வரும். அப்போது எதிரணி அவுட் கேட்டால் அம்பயர் அந்த பேட்ஸ்மேனுக்கு அவுட் அளிக்க வேண்டும்.
இந்திய அணியின் 2 பயிற்சிப் போட்டிகள் முடிந்தன.. இனி தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆரம்பம்!
இந்தச் சம்பவம் நடந்தபோது எந்த பாகிஸ்தான் வீரரும் அவுட் கேட்கவில்லை. விராட் கோலி அப்போது 41 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அவுட் கேட்டு இருந்தால் விராட் கோலி வெளியேறி இருக்க வேண்டிய நிலை வந்திருக்கும். போட்டியின் முடிவும் கூட இதனால் மாறி இருக்கலாம்.
ஒருவேளை விராட் கோலி அந்தப் பந்தை பிடிக்காமல் விட்டிருந்தால் நிச்சயமாக எந்த பாகிஸ்தான் ஃபீல்டரும் அருகே இல்லாததால் பந்து நீண்ட தூரம் சென்றிருக்கும். அதை பயன்படுத்தி இந்திய அணி மேலும் ஒரு ரன் அல்லது இரண்டு ரன்கள் ஓடி இருக்கலாம். ஆனால், விராட் கோலி அந்த சூழ்நிலையை உணராமல் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய ரன் வாய்ப்பை தடுத்தது மட்டும் இல்லாமல், தான் ரன் அவுட் ஆகும் அபாயத்திலும் சிக்கி இருக்கிறார்.
ஒருவேளை பாகிஸ்தான் வீரர்களில் எவரேனும் ஒருவர் அவுட் கேட்டிருந்தால் கூட நிலைமை தலைகீழாக மாறி இருக்கும். இந்த தவறை நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கவனித்து கூறினார். பின்னர் இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.