ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் அணியை வழிநடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்,

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் செல்ல மறுத்து விட்ட நிலையில், இந்திய அணியின் ஆட்டங்கள் துபாயில் நடந்து வருகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை பந்தாடி விட்டு அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. இந்திய அணி வரும் 2ம் தேதி கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை துபாய் சர்வதேச மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகள் முதலிடம் பிடிக்கும் என்பதால் இது முக்கியத்துவம்வாய்ந்த ஆட்டமாக உள்ளது. இந்திய அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் இந்திய அணியில் பல்வேறு வீரர்கள் காயம் அடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சிறிய காய பிரச்சனையுடன் போராடிய கேப்டன் ரோகித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. முழுமையாக உடற்தகுதி பெறவில்லை என்றால் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் துணை கேப்டன் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
இதேபோல் இந்திய அணியின் பாஸ்ட் பவுலர் முகமது ஷமி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கால் வலியால் அவதிப்பட்டார். அந்த ஆட்டத்தில் அவர் சிறிது சிகிச்சை பெற்று விளையாடினார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமி விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. ஒருவேளை ஷமி முழு உடற்தகுதி பெற்றாலும் அவருக்கு நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது! ஏன்?

ஏற்கெனவே ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாத நிலையில், ஷமி விஷயத்தில் பிசிசிஐ ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஷமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாட இருக்கிறார். ரோகித் சர்மா விளையாடவில்லை என்றால் சுப்மன் கில்லும், கே.எல்.ராகுலும் ஒப்பனிங்கில் களமிறங்க உள்ளனர். விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் விளையாட உள்ளனர்.
அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் களம் காண உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் வரிசையை நிரப்ப உள்ளார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா வேகப்பந்து வீச்சில் சாதிக்க உள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா.
Afghanistan vs England: இங்கிலாந்தை பந்தாடிய அதிரடி அசுரன்! யார் இந்த இப்ராஹிம் சத்ரான்?