ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி துபாயில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேப்படி மதியம் 2:30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே தழுவாமல் பைனலுக்கு வந்திருக்கிறது. ஆனால் நியூசிலாந்து அணி இந்தியாவிடம் மட்டும்தான் தோல்வியே தழுவியது. நியூசிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே பலமாக இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த ஒரே அணியாக நியூசிலாந்து மட்டும்தான் விளங்கியது. இந்திய அணியை போல் நியூசிலாந்து அணிகளும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் பேட்டிங்கிலும் நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடி காட்டுகிறார்கள். இதனால் இறுதிப்போட்டி கடும் சவால்களை கொடுக்கும்.
இந்த நிலையில் இந்த இறுதிப்போட்டி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்திருக்கும் கருத்தை தற்போது பார்க்கலாம். "நிச்சயமாக இறுதிப்போட்டி இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்."
"இரண்டு அணியிலுமே மேட்ச் வின்னர்ஸ் இருக்கிறார்கள். ஆனால் நியூசிலாந்து அணியில் நான்கு வீரர்கள் மட்டும்தான் மேட்ச் வின்னர்ஸ்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை 11 வீரர்களுமே மேட்ச் வின்னர்ஸ்களாக உள்ளனர். கூடுதலாக இரண்டு வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அமர்ந்திருக்கிறார்கள்."
"இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் நியூசிலாந்து அணியில் கேப்டன் மிட்செல் ஷாட்நர் மற்றும் இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் வீரராக விளங்குவார் என நினைக்கின்றேன். சாட்னர் தன்னுடைய பந்துவீச்சு மூலம் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அவர் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார். எனினும் இந்திய அணியில் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய அணியில் இருக்கும் சீனியர்கள் நியூசிலாந்து பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்" என்று ராயுடு கூறியுள்ளார்.