ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாயில் மட்டும் விளையாடுவதை பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்தியா ஒரே மைதானத்தில் எந்த பயணமும் இன்றி விளையாடுவதால் தான் வெற்றி பெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சூழலில் இறுதிப் போட்டிக்கு தோல்வியே பெறாமல் இந்திய அணி பைனலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, இந்திய அணிக்கு ஆதரவு வழங்கியிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எதிரணிகள் இந்தியாவை பார்த்து பயப்படுகிறது. எதிரணிகளிடம் பயத்தை இந்தியா விதைத்து விட்டது. தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி நியூசிலாந்தாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் தற்போது இந்தியாவை பார்த்து பயப்பட செய்கிறார்கள்.
லீக் சுற்றில் கூட நியூசிலாந்து அணி தொடர்ந்து பந்து வீச்சை மாற்றிக் கொண்டே வந்தது. பெரும்பாலான வீரர்களை பந்து வீச வைத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு அவர்கள் தயாராகி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியில் நியூசிலாந்துக்கு சாதகமாக டாஸ் அமைந்தது.
மேலும் நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ஆனால் தற்போது இந்திய வீரர்களுக்கு எதிராக அவர்கள் இதே போல் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது சந்தேகம் தான். ஏனென்றால் அக்சர் பட்டேல், ஜடேஜா போன்ற வீரர்கள் அபாயகரமாக விளங்குவார்கள். ஏற்கனவே வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
அதேபோன்று குல்தீப், நல்ல முறையில் பந்து வீசுவார். இதன் மூலம் இந்தியாவை எப்படி நியூசிலாந்து வீரர்கள் எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இதனால் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்படும் என்று பாசித் அலி தெரிவித்துள்ளார்.லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி 205 ரன்கள் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.