ARTICLE AD BOX
இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தா ஆடுகளம் ரன்கு குவிப்புக்கு சாதகமாக இருக்கும்.
மைதானத்தின் சுற்றளவும் மிகவும் குறைவு என்பதால் இன்றைய ஆட்டத்தில் ரன்கள் விருந்து இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் முதலில் பந்து வீசுவது சாலச் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் யோசிக்காமல் தான் பந்து வீசப் போவதாக அறிவித்தார்.
சுமார் 14 மாதத்திற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள முகமது சமி முதல் டி20 போட்டிகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறவில்லை என சூரியகுமார் அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ் நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கிறோம்.
ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருக்கும் என நினைக்கின்றேன். அது மட்டும் இல்லாமல் பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருக்கும். இந்த போட்டியை எங்களுடைய அணி வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராக இருக்கின்றோம். எங்கள் இரண்டு அணிகளும் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள்.
எங்கள் அணியின் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருப்பதால் யாரை தேர்வு செய்வது என்பதில் நல்ல தலைவலியாகவே இருந்தது. எங்கள் பலத்தை நாங்கள் தக்க வைக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இன்றைய ஆட்டம் நிச்சயம் நன்றாக இருக்கும். பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும் என நினைக்கின்றேன். இந்தியாவுக்கு எதிராக இது போன்ற சூழலில் விளையாடுவதை பெருமையாக நினைக்கின்றேன். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி நான்கு வேக பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கியுள்ள நிலையில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. ஆர்ஸ்தீப் சிங் மட்டும்தான் வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். நிதிஷ்குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆல் ரவுண்டர் வேகப் பந்துவீச்சாளராக உள்ளனர்.