IND vs ENG 5th T20: இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கம்?; பிளேயிங் லெவன் இதோ!

2 hours ago
ARTICLE AD BOX

இந்தியா -இங்கிலாந்து இடையே 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

 இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கம்?; பிளேயிங் லெவன் இதோ!

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்தியாவும், 3வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 4வது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர். கடந்த போட்டியில் களமிறங்கியா ஷிவம் துபே, ரிங்கு சிங் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்தியா-இங்கிலாந்து டி20

ஆனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சஞ்சு சாம்சனின் பேட்டிங் படுமோசமாக உள்ளது. சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் மொத்தமே 26 ரன்கள் தான் எடுத்துள்ளார். சஞ்சு சாம்சன் 4 போட்டிகளில் மொத்தம் 35 ரன்கள் தான் எடுததுள்ளார். இதேபோல் பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் அக்சர் படேல் பேட்டிங்கில் ரன்கள் அடிக்கத் தடுமாறுகிறார்.

பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி 12 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மும்பை வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக விளங்கி வருகிறது. எட்டு போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் சராசரியாக 191 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளதால் சிக்சர் மழையை எதிர்பார்க்கலாம். அதே வேளையில் ஆரம்பத்தில் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். வேகம் மற்றும் ஸ்விங் இருக்கும். 

'இந்தியா மோசடி வெற்றி'; ஹர்சித் ராணா களமிறங்கியதற்கு இங்கிலாந்து ஆதங்கம்; ஐசிசி ரூல்ஸ் என்ன?
 

சஞ்சு சாம்சன்

வான்கடேவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிகரமாக சேஸிங் செய்யபப்ட்டுள்ளதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங் செய்யவே விரும்பும். தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் நீக்கபப்ட்டு அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் இடம்பெறலாம்.

இதேபோல் கடந்த போட்டியில் மாற்று வீரராக களமிறங்கி அசத்திய ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுகிறார். இது மட்டுமின்றி அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கப்படலாம்.

இந்திய அணி பிளேயிங் லெவன்

5வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் அல்லது வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்ரவர்த்தி.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மாற்றம் ஏதும் இருக்காது என எதிர்பார்க்கபடுகிறது. இங்கிலாந்து அணி உத்தேச பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், பென் டக்கெட்,  ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத் மற்றும் அடில் ரஷீத்.

சச்சின், பும்ரா, அஸ்வினுக்கு விருதுகள்; பிசிசிஐ விருது பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ!

Read Entire Article