IND vs BAN: சம்பவம் செய்த ரோஹித் -கோலி…கடைசியாக CT-யில் விளையாடியபோது என்ன நடந்தது தெரியுமா?

4 days ago
ARTICLE AD BOX
2017 ct ban vs ind

துபாய் : 2025-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இன்று நடைபெறவுள்ள தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெறவுள்ளது. போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழலில், இதற்கு முன்னதாக அதாவது கடைசியாக இந்த இரண்டு அணிகளும் 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி  தொடரில் மோதிய போட்டியில் மறக்கவே முடியாத அளவுக்கு சம்பவம் ஒன்று நடந்தது. அது என்னவென்று கொஞ்சம் பின் சென்று பார்ப்போம்…

ஜூன் 15 அன்று, இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அடுத்தத்தக்க 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கிய நிலையில், ரோஹித் சர்மா – ஷிகர் தவான் இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். அப்படி அதிரடியாக விளையாடியபோது வங்கதேசத்திற்கு கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும் வகையில் ஷிகர் 46 ரன்களில் அவுட் ஆனார்.

அந்த ஆறுதல் கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அவருக்கு பிறகு களத்திற்கு வந்த விராட் கோலி அதே போல அதிரடியை தொடர்ந்து ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து வங்கதேச வீரர்களின் பந்துகளை சிக்ஸர்களுக்கு தெறிக்கவிட்டார். ரோஹித் சர்மா சதம் விளாசி (123 ரன்களுக்கு நாட் அவுட்) விராட் கோலி 94 ரன்களுக்கு நாட் அவுட்டில் இருந்தனர்.

இருவருடைய அதிரடியான 40.1 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மறக்க முடியாத சம்பவத்தை செய்தது. அந்த சம்பவத்தை போலவே இன்றும் விராட் -ரோஹித் அதிரடியாக விளையாட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், இருவரும் சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. எனவே, விமர்சனங்கள் அனைத்திற்கும் இந்த தொடரில் இருவரும் தங்களுடைய பேட்டிங் மூலம் பதிலடி கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அது மட்டுமின்றி, கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியையும் அடைந்தது. எனவே, இந்த ஆண்டு முதல் போட்டியில் வெற்றிபெறுவதற்கு தான் முயற்சி செய்யும். போட்டியில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Read Entire Article