ARTICLE AD BOX
மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய தலைவலி ஒன்று ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக பேட்டிங்கில் தான் யாரைத் தேர்வு செய்வது யாரை விடுவது என்ற குழப்பம் ஏற்படும்.
ஆனால் இம்முறை இந்திய அணி பேட்டிங்கில் பெரிய அளவில் செட்டில் ஆகிவிட்டது. விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்யப் போகிறோம் என்பது குறித்து கூட இந்திய அணி தற்போது தெளிவான முடிவை எடுத்திருக்கிறது.

இந்த சூழலில் இந்திய அணியில் பந்துவீச்சாளர்களாக யாரை தேர்வு செய்வது தான் என்பது பெரிய குழப்பம் இருக்கிறது. ஏனென்றால் அணியில் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2 சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்துமா இல்லை மூன்று ஸ்பின்னர்களை பயன்படுத்துமா என்ற குழப்பம் ஏற்படுகிறது.
இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, தாம் ஐந்து சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என பார்க்கவில்லை என்றும், அவர்களை தாம் ஆல் ரவுண்டர்களாகத்தான் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் ஜடேஜா, அக்சர் பட்டேல் என இரண்டு வீரர்களையும் பிளேயிங் லெவனில் வைக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கிறார்.
இதனால் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி இடம் பெறுவாரா இல்லை குல்தீப் இடம் பெறுவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வருண் சக்கரவர்த்தி அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை வேட்டையாடி வருகிறார். ஆனால் துபாயில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என பெருமையை குல்தீப் பெற்று இருக்கிறார்.
இதனால் எந்த வீரரை அணியில் சேர்ப்பது யாரை விடுவது என்ற குழப்பத்தில் ரோகித் சர்மா இருக்கின்றார். அனுபவம் என்று பார்த்தால் குல்தீப்க்கும், வீரர்களின் தற்போதைய பார்ம் என்று பார்த்தால் வருண் சக்கரவர்த்தியுமே முன்னுரிமை பெறுகிறார்கள். இதனால் வீரர்கள் தேர்வு ரோகித்,கம்பீருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.