ARTICLE AD BOX
ராய்பூர்: இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் எனும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான டி20 தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணியும், பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.
இந்த இறுதிப்போட்டி ராய்ப்பூரில் நடைபெறுகிறது. மார்ச் 16 (இன்று) இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. 7:00 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது. சச்சின் டெண்டுல்கர் விளையாட உள்ள இறுதிப் போட்டி என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும், பிரையன் லாராவுக்கு எதிராக ஒரு இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதால் இந்த போட்டி பெரும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியை எப்படி நேரலையில் பார்ப்பது என பலரும் தேடி வருகின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் மோதும் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், செயலியிலும் இலவசமாக காணலாம். தொலைக்காட்சியில் இந்த போட்டியை பார்க்க விரும்புபவர்கள் கலர்ஸ் சினி பிளக்ஸ் மற்றும் கலர்ஸ் சினி பிளக்ஸ் சூப்பர் ஹிட் ஆகிய சேனல்களில் இந்த போட்டியை காணலாம்.
இந்தியா மாஸ்டர்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஆட உள்ள அணியில் பல முன்னாள் நட்சத்திர வீரர்கள் உள்ளனர். யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், யூசுப் பதான், அம்பத்தி ராயுடு, வினய் குமார், நமன் ஓஜா, ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
IMLT20-தெறிக்கவிட்ட சச்சின்.. 7 சிக்சர்களை பறக்கவிட்ட யுவ்ராஜ் சிங்.. ஆஸ்திரேலியாவை ஓட விட்ட இந்தியா
அதே போல வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியிலும் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். கேப்டனாக செயல்பட உள்ள பிரையன் லாராவுடன் அந்த அணியில் டுவைன் ஸ்மித், லென்டில் சிம்மன்ஸ், சாட்விக் வால்டன், தினேஷ் ரம்தின், டினோ பெஸ்ட், ரவி ராம்பால், பிடல் எட்வர்ட்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.