ARTICLE AD BOX
Hussaini Health: கராத்தே, வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி தான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து மக்களுக்கு பெரும் ஷாக்கை அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், கலாட்டா பிங்க் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஒவ்வொரு நொடியும் சாவு
அந்தப் பேட்டியில், நான் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ரொம்ப தைரியமா இருக்கேன். கேன்சர் வந்துடுச்சு. ஐயோ சாகப் போறோமேன்னு எல்லாம் நான் இல்ல. ரொம்ப தைரியமா, தீர்க்கமான முடிவோட இருக்கேன். தன்னம்பிக்கையோட இருக்கேன்.
மேலும் படிக்க: பாட்டு ஹிட் ஆக கெமிஸ்ட்ரி ரொம்ப முக்கியம்.. ஜி.வி. பிரகாஷ்
கேன்சர் எல்லாம் ஒரு வரம். அதுலயும் பிளட் கேன்சர் மாபெரும் வரும். எனக்கு பிளட் கேன்சரையும் தாண்டி ஏ பிளாஸ்டிக் அனிமியா இருக்கு. கோயிலுக்கு போறவனுக்கு ஒவ்வொரு நொடியும் சாவு. வீரனுக்கு ஒரே முறை தான் சாவு.
ஏன் பயப்படணும்
அந்த ஒருமுறைக்காக தினமும் பிராக்டீஸ் பண்றது தான் கரேத்தே. அது கொல்றதுக்கும் சாவுறதுக்கும் தயாரா இருக்க தான் கராத்தே கத்துக்கொடுக்குது. தன்னைத் தானே பாதுகாப்பவன் தான் கராத்தே வீரன். எல்லாரும் தான் சாவப்போறான். அதபாத்து ஏன் பயப்படணும்.
நான் உயிர் வாழணும்ன்னா
டாக்டர் நான் இன்னைக்கோ நாளைக்கோ எப்போ வேணாலும் போயிடுவேன்னு சொல்லிருக்காரு. நான் ஒருநாள் உயிர் வாழனும்ன்னா 2 பாட்டல் ரத்தம் 1 யூனிட் பிளேட்லெட் வேணும். இல்லைன்னா 4 பாட்டில் பிளேட்லெட் கொடுத்தா தான் ஒரு நாள தாண்டுவேன். அதையும் ஒரு முற ரெண்டுமுற தான் பண்ண முடியும்.
பிளட் கேன்சர்ல கூட ஒரு வருஷம், ஆறு மாசம் எல்லாம் உயிரோட இருக்கலாம். இதுல அப்படி இல்ல. இதுக்கு ட்ரீட்மெண்ட்டே இல்ல. ஒருவேளை எதாவது மிராக்கிள் நடந்து எலும்பு மஜ்ஜை திரும்ப வேலை செய்ய ஆரம்பிச்சா தான் கொஞ்சம் எல்லாம் சரியாகும். ஒருவேள எனக்கு அது நடந்தாலும் நடக்கலாம்.
மேலும் படிக்க: சூர்யாவுக்கு எதிரா எல்லாம் திட்டமிட்டே நடக்குது- ஜோதிகா
கேன்சருக்கு 3 காரணம்
எனக்கு இந்த கேன்சர் வந்ததுக்கு 3 காரணங்கள் சொல்றாங்க. ஒன்னு ஜெனிட்டிக்கா வந்திருக்கலாம். ஆனா என் குடும்பத்துல யாருக்குமே இந்த நோய் இல்ல. ரெண்டாவதா வைரஸ் அட்டாக்கால வந்திருக்கலாம்ன்னு சொல்றாங்க. மூனாவதா என்ன சொல்றாங்கன்னா, எதாவது ஷாக்கான விஷயம் நடந்து அதுல பாதிக்கப்பட்டா இப்படி கேன்சர் வர வாய்ப்பு இருக்காம்.
போராடியும் பலன் இல்ல
எனக்கு என்ன ஷாக்குன்னா நான் 15 வருஷமா எம்ஜிஆர் ஜானகி காலேஜ் வில்வித்தை கிரவுண்ட்ல தான் பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கோம். உமா ராஜேந்திரன்னு ஒருத்தர் இந்த இடத்த எங்களுக்கு கொடுத்திருக்காரு. அந்த இடத்துல திடீர்ன்னு கவர்ன்மெண்ட் ரோடு போடுது. எவ்ளோவோ போராடி பாத்தோம் ஆனா எங்களால முடியல.
அமைச்சர்கிட்ட கோரிக்கை
நான் உதயநிதிகிட்ட நேரடியா ஒரு கோரிக்கை வைக்குறேன். அவரு தான் விளையாட்டு துறை அமைச்சரா இருக்காரு. வீட்டுக்கு ஒரு வீரர் வீராங்கனைய உருவாக்க வேண்டியது இவரோட கடமை. 40 வருஷமா வில்வித்தை, கராத்தேன்னு ஊர் ஊரா மக்கள்கிட்ட விளையாட்ட கொண்டு போய் சேக்க நான் எத்தனையோ கஷ்டப்பட்டேன். நான் கேக்குறது ஒன்னே ஒன்னுதான். எல்லா விளையாட்டுக்கும் கிரவுண்ட் குடுக்குறீங்க. வில்வித்தைக்குன்னு ஒரே ஒரு கிரவுண்ட் கொடுங்க.
மேலும் படிக்க: லிடியன கத்துகிட்டு வர்ற சொன்னேன்- இளையராஜா விளக்கம்
பிளட் கேன்சர்
இந்த சம்பவம் நடந்ததுக்கு அப்புறம் தான் நான் 3 நாளா தூங்கல. இதுதான் எனக்கு நடந்த ஷாக். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. நான் ஒரு டிரெய்னர்.
என் உடம்புல சுகர், பிபி, கொலஸ்ட்ரால் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா, ரத்தம் மட்டும் வேலைய ஸ்டாப் பண்ணிடுச்சு. எந்த டெஸ்ட் எடுத்து பாத்தும் ஒன்னும் தெரியல. கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தர் வந்து என்ன செக் பண்ணி பாத்துட்டு என்னோட ஹிஸ்ட்ரி கேட்டாரு. அப்போ எதுவா இருந்தாலும் சொல்லுங்கன்னு சொன்னப்போ, அவரு 99.9 % இது பிளட் கேன்சரா இருக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னாரு.
ரத்தமே இல்ல
எனக்கு இது எல்லாம் பெரிய மேட்டரே இல்ல. ஆனா இது எவ்ளோ டீப்பா இருக்குன்னு தெரியாது. அதுக்காக டெஸ்ட் பண்ண ஆபரேஷன் பண்ண போகும்போது அத கேன்சல் பண்ணிட்டாங்க. ஏன்னு விசாரிக்க ஆரம்பிச்சா என் உடம்புல ரத்தமே இல்லன்னு சொல்லிட்டாங்க.
உடனே 2 பாட்டல் பிளட், 1பாட்டல் பிளேட்லெட் ஏத்துனாங்க. இதுதான் டெய்லி, இது இல்லைன்னா என்னால அடுத்த நாள் உயிர்வாழ முடியாது என தனது கேன்சர் பாதிப்பு குறித்து பேசியுள்ளார்.
