Hiphop Tamizha Net Worth: சென்னையைக் கலக்கும் கோவை பையன் ஹிப்ஹாப் ஆதி.. சொத்து மதிப்பு!

4 days ago
ARTICLE AD BOX

Hiphop Tamizha Net Worth: சென்னையைக் கலக்கும் கோவை பையன் ஹிப்ஹாப் ஆதி.. சொத்து மதிப்பு!

News
oi-Mohanraj Thangavel
| Published: Thursday, February 20, 2025, 8:13 [IST]

சென்னை: திறமையும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் தமிழ் சினிமாவில், தனக்கான பக்கங்களை நிறுவ முடியும் என நிரூபித்துக் காட்டியவர் இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்து, அனைத்திலும் வெற்றி கண்டு வரும் ஹிப் ஹாப் ஆதி. இவர் இன்று தனது 35 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர் குறித்தும், அவரது சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Hiphop Tamizha Aadhi Hiphop Aadhi Birthday Hiphop Aadhi Net Worth

தமிழில் ஹிப்ஹாப் மற்றும் ராப் பாடல்களைக் கொண்டு வந்தது மட்டும் இல்லாமல், அதை மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்து, வெற்றி கண்டவர் ஹிப் ஹாப் ஆதி. தனது ஹிப் ஹாப் பாடல்களுக்கு தானே வரிகள் எழுதி, தானே இசையமைத்து, தானே மூச்சு முட்ட பாடவும் செய்து தமிழ்நாட்டு அளவில் பெரும் புகழ் பெற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற, ஜல்லிக்கட்டு போராட்டத்தில், இவர் உருவாக்கிய ஜல்லிக்கட்டு தொடர்பான ஆல்பம் பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் பங்கு வகித்தது.

Hiphop Tamizha Aadhi Hiphop Aadhi Birthday Hiphop Aadhi Net Worth

ஹிப்ஹாப்: ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமடைந்த ஹிப் ஹாப் ஆதி, அதன் பின்னர் சினிமாக்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி. தொடர்ந்து பல படங்களில் அசத்தலான இசையை கொடுத்தார். குறிப்பாக பல ரசிகர்கள் இவர் இசை எப்போதும் வேகமாகத்தான் இருக்கும் என முன்கூட்டியே தீர்மானித்து கொள்வதால், இவர் இசையமைத்த பல படங்களின் புகழை வேறு யாரோ ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள். குறிப்பாக கவண், இன்று நேற்று நாளை, இமைக்கா நொடிகள், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கு வேறு யாரோ இசையமைத்ததாக பேசும் ரசிகர்களும் உள்ளார்கள்.

Hiphop Tamizha Aadhi Hiphop Aadhi Birthday Hiphop Aadhi Net Worth

இசை: யூடியூப் தளத்திலும் கான்செர்ட்டுகளிலும் கலக்கி வந்த ஹிப்ஹாப் ஆதியை திரையுலகிற்கு இசையமைப்பாளராக அழைத்து வந்தவர் சுந்தர் சி. அது மட்டும் இல்லாமல், தனது பல படங்களுக்கு இவரையே இசையமைக்க வைத்தார். முனைவர் பட்ட ஆய்வு படிப்புக்கு ஹிப்ஹாப் ஆதி சென்றபோதுதான், மற்ற இசையமைப்பாளர்கள் உடன் பணியாற்றினார். ஆதி இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல், இயக்குநராக, தயாரிப்பாளராக , பாடலாசிரியராக வெற்றி கண்டுள்ளார். தனது கலைப் பயண போராட்டத்தை மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் அனைவருக்கும் எடுத்துக் காட்டினார்.

Hiphop Tamizha Aadhi Hiphop Aadhi Birthday Hiphop Aadhi Net Worth

சொத்து மதிப்பு: கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் கடைசி உலகப்போர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றது. இது மட்டும் இல்லாமல், தனது முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை முடித்த பின்னர், இரண்டு படங்களில் நடித்தும் முடித்துவிட்டார், ஆதி. கடந்த 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பிறந்த இவர், இன்று தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஹிப்ஹாப் ஆதி கிட்டத்தட்ட ரூபாய் 10 கோடிகள் முதல் ரூபாய் 15 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு இசையமைக்க, ரூபாய் 3 கோடிகள் முதல் ரூபாய் 7 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகிறாராம். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆதிக்கு பெரிய அளவில் விருப்பங்கள் இல்லாததால், விலையுயர்ந்த கார்கள், பொருட்களை வாங்குவதில் அக்கறை செலுத்தாமல் உள்ளார்.

Hiphop Tamizha Aadhi Hiphop Aadhi Birthday Hiphop Aadhi Net Worth

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Music Director Hiphop Tamizha Aadhi Celebrates His 35th Birthday And His Net Worth
Read Entire Article