Headlines|வேளாண் பட்ஜெட் தாக்கல் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு நிபந்தனை வரை!

3 hours ago
ARTICLE AD BOX
Published on: 
15 Mar 2025, 3:41 am
  • தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல். வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

  • சென்னையில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம். பேரவைக் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்வதென அறிவுறுத்திய மு.க. ஸ்டாலின்.

  • தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை, ஒருதலைபட்சமானது. அனைவரின் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்.

  • தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு தவறானது என, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து. இந்தியை எதிர்க்கும் மாநிலம், லாபத்திற்காக திரைப்படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்வது வெளியிடுவது ஏன் என்றும் கேள்வி.

  • வரும் 23ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் தமிழ்நாடு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அறிக்கை.

  • காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பூம்புகாரில் நடைபெற்ற பரவசமூட்டும் தீர்த்தவாரி வைபவம். 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளிய தலைச்சங்காடு நான்மதியப் பெருமாள்.

  • பஞ்சாப் பொற்கோயிலுக்குள் புகுந்து இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர். சேவகர்கள், பக்தர்கள் என 5 பேர் காயம்; காவல் துறை தீவிர விசாரணை.

  • எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையசேவைக்கு இந்தியாவில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும் என ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்.

  • உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு. ரஷ்ய வீரர்களால் சூழப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை உயிரோடு விடுமாறு புதினிடம் வலியுறுத்தல்.

  • கனடா நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி. ஜஸ்ட்டின் ட்ரூடோ அதிகாரப்பூர்வமாக பிரதமர் பதவியிலிருந்து விலகிய நிலையில் பொறுப்பேற்பு.

  • ரஜினிகாந்தின் ‘கூலி’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு. இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து EXclusive photos-ஐ பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம்.

Read Entire Article