Headlines|சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் முதல் துர்நாற்றம் வீசிய ரயில்பெட்டி வரை!

22 hours ago
ARTICLE AD BOX
Published on: 
17 Mar 2025, 1:41 am
  • சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்மீது தமிழக சட்டப்பேரவையில் இன்று வாக்கெடுப்பு.

  • சென்னை கோட்டூர்புரத்தில் இரண்டு ரவுடிகள் வெட்டிக் கொலை. காதலி கொலைக்கு பழிதீர்க்க காத்திருந்தவரை வெட்டிக் கொன்ற கும்பல்.

  • மொழி விவகாரத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்டவே ரூ எழுத்தை வைத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம். தமிழ் மொழியை பிடிக்காதவர்கள் இதனை பெரிதாக்கிவிட்டதாகவும் விமர்சனம்.

  • ‘ரூ’ போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டதாக சினிமா வசனம் பேசுகிறார் முதல்வர். பட்ஜெட் ஹிட் ஆவது, அறிவிப்பதில் இல்லை; செயல்படுத்துவதில் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான தேர்வு மைய ஒதுக்கீட்டில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. வழக்கமான நடைமுறையே பின்பற்றப்படுவதாக ரயில்வே விளக்கம்.

  • டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என தவெக தலைவர் விஜய் அறிக்கை. முறைகேடு குறித்து உரிய விசாரணை தேவை என்றும் வலியுறுத்தல்.

  • சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை மடைமாற்ற முடியாது. நடிகரின் பின்னால் செல்லும் இளைஞர்கள் விசிகவுக்கு தேவையில்லை என திருமாவளவன் பேச்சு.

  • திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன வரிசையில் நின்ற பக்தர் உயிரிழந்த விவகாரம். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.

  • கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் துர்நாற்றம் வீசியதாகப் புகார். நெல்லையில், அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்.

  • தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே இரு பிரிவினர் இடையே மோதல். கட்டைகளை கொண்டு தாக்க முயன்றதால் பரபரப்பு.

  • கோத்ரா வன்முறை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத சோகம். தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பேட்டி.

  • சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவரை மீட்டு வர சர்வதேச விண்வெளி நிலையம் சென்று சேர்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு. வரவேற்பு காட்சிகளை வெளியிட்ட நாசா.

  • பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் விடுதலைப் படை மீண்டும் கொலைவெறித் தாக்குதல். தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 90 ராணுவத்தினர் இறந்ததாக பலுச் படையினர் தகவல்.

  • மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது சச்சின் தலைமையிலான இந்திய அணி. இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதில் வீழ்த்தி அபாரம்.

  • நீர்ச்சத்து குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடு திரும்பினார். விரைந்து குணம் பெற வாழ்த்துவதாகவும் சட்டப்படி இன்னும் தாங்கள் பிரியவில்லை என்றும் மனைவி சாய்ரா பானு விளக்கம்.

Read Entire Article