Google போட்ட புது ரூல்ஸ்.. Gmail சேவையில் புதிய மாற்றம்.. இனி உள்ள போறது அவ்ளோ ஈஸி இல்ல!

4 hours ago
ARTICLE AD BOX

Google போட்ட புது ரூல்ஸ்.. Gmail சேவையில் புதிய மாற்றம்.. இனி உள்ள போறது அவ்ளோ ஈஸி இல்ல!

News
oi-Muthuraj
| Published: Friday, February 28, 2025, 0:27 [IST]

கூகுள் (Google) நிறுவனம் அதன் இமெயில் சேவையான ஜிமெயிலில் (Gmail) புதிய மாற்றம் (New Change) ஒன்றை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன மாற்றம்? திடீரென கூகுள் நிறுவனம் இப்படி செய்ய என்ன காரணம்? இதோ விவரங்கள்:

ஜிமெயில் சேவைக்கான எஸ்எம்எஸ் அடிப்படையிலான டூ-ஃபேக்டர் அங்கீகாரத்திற்கான (SMS based two factor authentication) ஆதரவை கூகுள் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பதிலாக கூகுள் நிறுவனமானது க்யூஆர் கோட்களை (QR codes) பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Google போட்ட புது ரூல்ஸ்.. Gmail சேவையில் புதிய மாற்றம்!

அதாவது, இப்போது வரையிலாக டூ-ஃபேக்டர் அங்கீகாரத்திற்காக, ஜிமெயில் பயனர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் கோட்களுக்கு (SMS Codes ) பதிலாக க்யூஆர் கோட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் க்யூக் ரெஸ்பான்ஸ் கோட்களுக்கான ஆதரவை (Quick Response Codes Support) கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது கூகுள் அக்கவுண்ட்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவர்கள், எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட லாக்-இன் கோட்களை பகிர்ந்து கொள்ளுமபடி ஜிமெயில் பயனர்களை ஏமாற்றலாம். அதன் மூலம் அவர்களுடைய கூகுள் அக்கவுண்ட் ஆனது பைபாஸ் செய்யப்படலாம்.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, கூகுள் நிறுவனம் அதன் எஸ்எம்எஸ் அடிப்படையிலான டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் கோட்களுக்கு பதிலாக புதிய க்யூஆர் கோட்களை வரும் மாதங்களில் அறிமுகம் செய்யலாம். தற்போது கூகுள் நிறுவனம் எஸ்எம்எஸ் வழியாக, 6 இலக்க குறியீட்டை பயனர்களுக்கு அனுப்பு வருகிறது

எஸ்எம்எஸ் அடிப்படையிலான டூ-ஃபேக்டர் அங்கீகார கோட்களுக்கான ஆதரவை கூகுள் நிறுவனம் நிறுத்தியதும், ஜிமெயில் பயனர்களுக்கு க்யூஆர் குறியீடு வழங்கப்படும், இது அவர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா ஆப்பை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்பட வேண்டும். சரியான பாஸ்வேர்ட் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, இந்த க்யூஆர் கோட்களை பயன்படுத்தி லாக்-இன் செய்ய வேண்டும். இது ஜிமெயில் சேவைக்குள் ஒரு பயனரை அங்கீகரிப்பதற்கான மிகவும் பாதுகாப்பான வழியாக இருக்கும் என்றும் கூகுள் நிறுவனம் நம்புகிறது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் அதன் யுபிஐ பேமண்ட் ஆப் ஆன கூகுள் பே (Google Pay) ஆப்பில், யுபிஐ வழியிலான பணபரிவர்த்தனை தொடர்பான முக்கிய மாற்றம் ஒன்றை அமலுக்கு கொண்டு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் இனிமேல் கூகுள் பே ஆப்பில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்ட்டுகளுக்கு இனி கட்டணம் (Convenience fee) வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இரண்டு நபர்களுக்கு இடையேயான யுபிஐ வழியிலான பணபரிவர்த்தனை அல்லது ஒரு கடைக்காரருக்கு நீங்கள் செய்யும் வழக்கமான யுபிஐ பேமெண்ட்கள் (Usual UPI Payments) ஆனது தொடர்ந்து இலவசமாக இருக்கும். ஆனால் கூகுள் பே ஆப் வழியாக டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பில் பேமெண்ட்களை செய்தால் - கட்டணம் வசூலிக்கப்படும்

கூகுள் பே அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்களின்படி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை (Credit or Debit Card) பயன்படுத்தி செய்யப்படும் பில் பேமெண்ட்களுக்கு (Bill Payments), அதன் இறுதி தொகையில் இருந்து 1% முதல் 5% வரை கட்டணம் வசூலிக்கப்படும். உதாணரணத்திற்கு உங்களுடைய மின் கட்டணம் ரூ.1,000 ஆக இருந்தால், அதில் 1 சதவீதம் (அதாவது ரூ.10) கட்டணமாக வசூலிக்கப்படும்.

கூகுள் பே அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் முற்றிலும் புதியவை அல்ல. பேடிஎம் (Paytm) மற்றும் போன்பே (PhonePe) போன்ற பிற யுபிஐ ஆப்களில் ஏற்கனவே இதுபோன்ற கட்டணங்கள் நடைமுறையில் உள்ளன. இவ்விரு ஆப்களுமே பேங்க் கார்டுகள் மூலம் செய்யப்படும் பில் பேமெண்ட்டுகளுக்கு இதே போன்ற கட்டணங்களை வசூலிக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Google to Replace SMS Based Two Factor Authentication With QR Code for Gmail Soon
Read Entire Article