ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தைத் தயாரித்து இருக்கிறது. இப்படம் வரக்கூடிய, இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்திலிருந்து வெளியான ஓஜி சம்பவம் பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பாகவும், அஜித்துடன் பணியாற்றியது குறித்தும் விகடன் இணையதளத்திற்கு படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, ‘அனைவருக்குள்ளும் குட் பேட் அக்லி ஆகிய குணங்கள் இருக்கும். இந்த உலகம் நம்மிடம் நன்றாக நடந்துகொள்ளும் போது, நாம் நன்றாக இருப்போம். ஆனால், அதே நேரம் பேடாக இருக்கும் போது, நாம் அக்லியாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுதான் குட் பேட் அக்லி படத்தின் ஒன்லைன்.
எமோஷனல் படமாகவும் இருக்கும்
இந்தப்படம் ஆக்ஷன் படமாக மட்டுமல்லமால் ஒரு எமோஷனல் படமாகவும் இருக்கும். படத்தில் அப்பா - மகனுக்கு இடையேயான எமோஷன் நன்றாக வொர்க் அவுட்டாகும் என நம்புகிறேன்.
குட் பேட் அக்லி டைட்டிலை அஜித்தான் கொடுத்தார். அஜித் இந்த தலைப்பை சொன்னது மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியானது. படத்தில் அஜித் பில்லா, தீனா என பல கெட்டப்களில் வருகிறார். இந்தப்படத்திற்காக கடுமையாக டயட் இருந்தார். அஜித் ரெட் ட்ராகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு நடிகராக என்ன செய்ய முடியுமோ அதை அவர் செய்திருக்கிறார்.
இந்த கதாபாத்திரத்தை அவரிடம் சொன்னதுமே அவர் ஓகே என்று சொல்லிவிட்டார். அவரைப்போல மன உறுதி கொண்ட நபரை பார்ப்பது மிகவும் அரிதான விஷயம். விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அவர் நேரடியாக குட் பேட் அக்லி படத்திற்கு வருவார்.வழியில் தூங்கிக்கொள்வார். அப்படித்தான் ஷூட்டிங் நடந்தது.72 நாட்களில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துக்கொடுத்தார்.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்