Good Bad Ugly Animated Teaser: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த மாதம் விடாமுயற்சி வெளியான நிலையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீசாக உள்ளது.

குட் பேட் அக்லி அனிமேஷன் டீசர்:

குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு ரிலீசானது முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக, படத்தில் அஜித்தின் கெட்டப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான குட் பேட் அக்லி படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டீசரை அனிமேஷனில் பாசதானி அனிமேஷன் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வாழ்த்து:

Mass Maamey!
Great work 'Paasadani Animation' ❤‍🔥#GoodBadUglyTeaser#GoodBadUgly https://t.co/QIzvBCI0cy

— Mythri Movie Makers (@MythriOfficial) March 6, 2025

இந்த அனிமேஷனில் அஜித்தின் இளமைக்கால கெட்டப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த வீடியோவை குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மாஸ் மாமே என்று குறிப்பிட்டு அபாரமான உழைப்பு என்று பாசதானி அனிமேஷனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிரீடம் படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ் அஜித்தின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அஜித் மாஸ் ஹிட் படங்கள்:

கேங்ஸ்டர் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளது. பிரான்ஸ் உள்பட வெளிநாட்டில் இந்த படம் உருவாகியுள்ளது. தீனா, அமர்க்களம், பில்லா, ரெட் என பல அஜித் படங்களின் ரெஃபரென்ஸ் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.