Good Bad Ugly Teaser Update (Photo Credit: @Adhikravi X)

பிப்ரவரி 27, கோடம்பாக்கம் (Cinema News): தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி உட்பட சில திரைப்படங்களை இயக்கி வழங்கி, மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandra). இவர் தற்போது தமிழ் திரையுலகில் அல்டிமேட் சூப்பர்ஸ்டார் என வருணிக்கப்படும் ஏகே அஜித் குமார் (Ajith Kumar)-ன் 63 வது திரைப்படத்தை இயக்கி வழங்கவுள்ளார். ஏகே 63 என பெயரிடப்பட்ட திரைப்படத்திற்கு, பின்னாளில் குட் பேட் அக்லீ (Good Bad Ugly) என பெயரிடப்பட்டது. Murmur Trailer Tamil: காட்டுக்குள் கேமிரா., வேட்டையாடும் சூனியக்காரி.. தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம்.. மர்மர் படத்தின் பதறவைக்கும் ட்ரைலர் இதோ.! 

குட் பேட் அக்லீ படக்குழு:

ரூ.250 கோடி செலவில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) தயாரித்து வழங்கும் திரைப்படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வழங்குகிறார். படத்தின் இசையமைப்பு பணிகளை ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar), ஒளிப்பதிவு பணிகளை அபிநந்தன் ராமானுஜம், எடிட்டிங் பணிகளை விஜய் வேலுக்குட்டி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். நடிகர்கள் அஜித் குமார், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு உட்பட பலரும் படத்தில் நடித்துள்ளனர். Leg Piece Trailer: அரசியலுடன் சர்ச்சை கேள்வி.. யோகி பானு, விடிவி கணேஷ் நடிக்க உருவாகியுள்ள 'லெக் பீஸ்' ட்ரைலர் இதோ.! 

டீசர் தொடர்பான அறிவிப்பு:

இந்நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் டீசர் நாளை (பிப்.28), இரவு 07:03 மணியளவில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அப்டேட்டை படத்தின் இயக்குனர் ஆதிக் தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகிறது.

குட் பேட் அக்லீ படத்தின் டீசர் (Good Bad Ugly Teaser) தொடர்பான அறிவிப்பு:

#GoodBadUglyTeaser Tomorrow at 7.03pm ❤️🙏🏻 #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️🙏🏻 pic.twitter.com/P7woUkg22E

— Adhik Ravichandran () February 27, 2025