ARTICLE AD BOX
Good Bad Ugly Censor Cut Review: குட் பேட் அக்லிக்கு பாராட்டு மழை.. சென்சார் போர்ட் கொடுத்த விமர்சனம்
சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். கி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறது மைத்ரீ மூவீஸ் நிறுவனம். படத்தின் ரிலீஸ் பணிகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கும்போது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தகவல் ஒன்று திரைத்துறை வட்டாரத்தில் உலா வருகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் இன்னும் இரண்டு வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக படத்தை ரிலீஸ் செய்வதற்கு தணிக்கை குழுவுக்கு அனுப்பியுள்ளார்கள். இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

குட் பேட் அக்லி: இப்படியான நிலையில் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை த்ரிஷாவின் லுக், படத்தின் டீசர், அதையடுத்து படத்தின் முதல் பாடல் என அடுத்தடுத்து ரிலீஸ் செய்து படக்குழு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறது. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் சரியாக போகாததால், குட் பேட் அக்லி படத்திற்கு பெருமளவில் வரவேற்பு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எதிர்பார்த்ததை விடவும், ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால், அஜித் குமார் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் செம ஹேப்பியாக உள்ளது.
டீசர்: படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தமிழ் சினிமா வரலாற்றில் 24 மணி நேரத்தில் அதிகமான வியூவ்ஸ்களைப் பெற்ற டீசர் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் டீசரில் அஜித் பல கெட்டப்களில் காட்டப்பட்டதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதனாலே பலரும் டீசரை பலமுறை பார்த்தார்கள். டீசர் பரவலாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை பார்க்க பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் குவிந்தார்கள். டீசர் மிகவும் பிடித்துப்போனதால், ரசிகர்கள் கொண்டாடினர். மதுரை தல அஜித் ரசிகர்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரத்துடன் டீசரை பார்க்க வந்தார்கள்.

சென்சார்: இப்படியான நிலையில் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் தகவல் திரைத்துறை வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது படத்தை படக்குழு சென்சாருக்கு அனுப்பி உள்ளார்கள். படம் பார்த்த சென்சார் குழுவினருக்கு படம் மிகவும் பிடித்துப்போனதாம். குறிப்பாக வித்தியாசமான திரைக்கதையில் அஜித் இந்த படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார் என படக்குழுவினரை பாராட்டியுள்ளார். சென்சார் போர்டில் இப்படி கூறிவிட்டதால், மொத்த படக்குழுவும் தற்போது செம ஹேப்பியாக உள்ளார்களாம். இந்த தகவல் தற்போது திரைத்துறையில் வேகமாக பரவி வருகிறது. விவரத்தை கேள்விப்பட்ட ரசிகர்களுக்கும் இந்த தகவல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.