Gold Rate Today: போன வருஷம் பட்ஜெட் முடிந்ததும் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? ஆனா இன்று?

2 hours ago
ARTICLE AD BOX

Gold Rate Today: போன வருஷம் பட்ஜெட் முடிந்ததும் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? ஆனா இன்று?

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று (பிப்ரவரி 2-ஆம் தேதி) மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ 62,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 107 -க்கு விற்பனையாகிறது.

சென்னையில் பிப்ரவரி 1-ஆம் தேதியான நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ 61,960-க்கும், கிராமுக்கு ரூ 15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7745-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையிலும் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate gold price

இந்த நிலையில் மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ 360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 62,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ 45 உயர்ந்து கிராம் ரூ 7790 க்கு விற்பனையாகிறது.

இன்று பிப்ரவரி 2ஆம் தேதி மார்க்கெட் விடுமுறை என்பதால் நேற்று விற்கப்பட்ட விலைக்கே இன்று தங்கம், வெள்ளி விற்பனையாகிறது.

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் நாளே தங்கம் விலையில் அதிரடியாக உயர்ந்திருந்தது.

நேற்று காலையில் தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் தற்போது மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து மேலும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ 360 உயர்ந்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 480 உயர்ந்துள்ளது.

2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலான நிலையில் தங்கம் விலை சவரன் ரூ 61,960 க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ 62,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவித்ததை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு சவரனுக்கு ரூ 2200 குறைந்து தங்கம் விலை ரூ 52,400-க்கு விற்பனையானது.

சென்னையில் 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:

02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)
31.01.2025- ஒரு சவரன் ரூ.61,840
30.01.2025- ஒரு சவரன் ரூ.60,880
29.01.2025- ஒரு சவரன் ரூ.60,760
28.01.2025- ஒரு சவரன் ரூ.60,080
27.01.2025- ஒரு சவரன் ரூ.60,320
26.01.2025- ஒரு சவரன் ரூ.60,440

பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதியே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துவிட்டது. நேற்று முன் தினம் சவரன் ரூ 960 உயர்ந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 480 ரூபாய் உயர்ந்து கடந்த இரு நாளில் சவரனுக்கு ரூ 1440 உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது தங்கத்தின் மீதான வரி குறைந்ததால் அன்று மாலையே தங்கத்தின் விலையும் குறைந்தது. ஆனால் இந்த முறை பட்ஜெட்டில் தங்கம் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் கடந்த 30 நாட்களில் கடந்த 1-ஆம் தேதி மட்டுமே தங்கத்தின் விலை குறைந்திருந்தது. தங்கம் விலை உச்சபட்சமாக கடந்த 31ஆம் தேதி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது முதல்முறையாக சவரன் ரூ 62 ஆயிரத்தை நெருங்கியது. அது போல் பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சவரன் விலை புதிய உச்சத்தை தொட்டது.

More From
Prev
Next
English summary
Gold Rate Today (தங்கம் விலை இன்று) [2nd February 2025]: சென்னையில் தங்கம் விலையில் இன்று (பிப்ரவரி 2-ஆம் தேதி) மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் தங்கம் ரூ 62,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read Entire Article