ARTICLE AD BOX
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அதேநேரத்தில், உலகில் நிலவும் போர் பதற்றம் தங்கம் விலை மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்து இருந்தாலும், நாளுக்கு நாள் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தும், சற்று குறைந்து காணப்படுகிறது.
இதனிடையே, இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.60,000 என்ற விலையைத் தாண்டியது. கடந்த சனிக்கிழமை (ஜன.25ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,555க்கும், ஒரு சவரன் ரூ.60,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,540- க்கும், ஒரு சவரன் ரூ. 60,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.