ARTICLE AD BOX
Gold rate today: இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. கிராமுக்கு 20 ரூபாய் அதிகரிப்பு!
பிப்ரவரி 22-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 22 கேரட் தங்கம் மட்டுமின்றி 24 கேரட் தங்கமும் 22 ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கு நேர் மாறாக 18 கேரட் தங்கம் கிராமுக்கு 23 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,777-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,045-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
நேற்றைய (21/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,025-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 64,200-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,250-க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,755-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 70,040-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,550-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,605-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,840-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 66,050-க்கும் விற்பனையானது.
இன்றைய (22/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ. 8,045-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ. 64,360-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 200 அதிகரித்து ரூ.80,450-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.22 அதிகரித்து ரூ. 8,777-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.176 அதிகரித்து ரூ. 70,216-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.220 அதிகரித்து ரூ. 87,770-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 23 குறைந்து ரூ. 6,582-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.184 குறைந்து ரூ. 52,656-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.230 குறைந்து ரூ. 65,820-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்தாலும் அல்லது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணத்தினாலும் தங்கம் விலை உயரலாம்.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது நுகர்வோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்த பலரும் இந்த விலை உயர்வு காரணமாக தங்கள் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலே கூறப்பட்டுள்ள விலை வெறும் தங்கத்திற்கானது மட்டுமே. இதோடு ஜிஎஸ்டி, மேக்கிங் சார்ஜஸ் போன்றவற்றை சேர்த்துக்கொண்டால் 1 கிராம் தங்கம் தோராயமாக ரூ.9,000-த்தை கடந்து விடும்.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி 107.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,07,900-த்திற்கு விற்பனையாகிறது.