ARTICLE AD BOX
Gold Rate Today: 2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.320 குறைவு! நகைப் பிரியர்கள் குஷி!
சென்னை: தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்று சரிவைக் கண்டுள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு மேலும் ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை திடீரென குறைந்தது. அதேபோன்ற அறிவிப்பு இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதையும் மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடாத நிலையில் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தங்கம் விலை
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது தங்கம் விலை. கடந்த ஜனவரி மாதம் முதலே தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.
அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மீதான வருவாய் குறையத் தொடங்கியுள்ள அதன் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது. கடன் பத்திரங்களை விற்று, அவற்றை தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை.
பிப்ரவரி தொடக்கம் முதலே
பிப்ரவரி மாதம் தொடக்கம் முதலே பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் உள்ளது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்திருந்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,050க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64,400க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.8050க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.50 குறைந்து ரூ.8,010க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை நிலவரம்:
27.02.2025 (இன்று) ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025 ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600
24.02.2025- ஒரு சவரன் ரூ.64,440
23.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520
19.02.2025- ஒரு சவரன் ரூ.64,280
18.02.2025- ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
15.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)
- தங்கம் இறக்குமதி தடாலடி சரிவு.. 20 வருடங்களில் இதுதான் முதல்முறை.. இந்திய பொருளாதாரம் எப்படி மாறும்?
- தங்கத்திற்கு பற்றாக்குறை இருக்கா? அமெரிக்கா + பிரிட்டனால் உயரும் தங்கம் விலை? ஆனந்த் சீனிவாசன் நறுக்
- டாய்லெட்டை திருடி கோடீஸ்வரர்களான கொள்ளையர்கள்.. இப்போ என்ன நடந்துச்சு பாருங்க.. ஐயோ பாவம்!
- நாடு விட்டு நாடு பறக்கும் தங்கம்.. விலை உச்சத்திற்கு போக இதுவே காரணம்! இனி குறைய வாய்ப்பு இருக்கா?
- டிரம்ப் ஆட்டம்! Rich Dad Poor Dad எழுத்தாளர் எச்சரித்த மாதிரியே நடக்குதே! ஒரே இரவில் பல கோடி போச்சு
- Gold Rate Today: ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?