#GetOutModi எடப்பாடி சொல்லும் போது வராத கோபம்.. உதயநிதி மீது ஏன்? அண்ணாமலையை கேட்டும் சூர்யா சிவா

3 days ago
ARTICLE AD BOX

#GetOutModi எடப்பாடி சொல்லும் போது வராத கோபம்.. உதயநிதி மீது ஏன்? அண்ணாமலையை கேட்டும் சூர்யா சிவா

Chennai
oi-Rajkumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் என்பது ட்விட்டரில் பதிவிடவும் டுவீட்ஸ் (Tweets) வைத்த இல்லை. மக்கள் மனங்களை வென்று அவர்கள் அளிக்கும் ஓட்ஸ் (Votes) வைத்துத்தான் என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டுமெனவும், அண்ணா சாலையில் எங்கே வரவேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டு அண்ணா வழியில் மக்களுக்காக பாடுபடுங்கள் கூறியுள்ளார் திருச்சி சூர்யா சிவா.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நேற்று முன் தினம் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

Surya Siva Annamalai udhayanidhi stalin

அப்போது பேசிய அவர்," தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்ற போது கடந்த முறை தமிழக மக்கள் 'கோ பேக் மோடி' என்று சொன்னார்கள். அப்படி துரத்தி அடித்த அவர்கள் மீண்டும் அதே போல தமிழ்நாட்டு மக்களிடம் செய்ய முயன்றால் கோ பேக் மோடி என்பதற்கு பதிலாக 'கெட் அவுட் மோடி' என்று சொல்லி துரத்துவார்கள் என பேசி இருந்தார்.

கெட் அவுட் மோடி என உதயநிதி பேசியதற்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் ( #GetOutStalin ) என பதிவிட்டார். இதை அடுத்து பாஜகவினர் அந்த ஹேஷ்டாக்கை ட்ரண்ட் செய்தனர்.

தொடர்ந்து 14 லட்சம் ட்விட்டர் பதிவுகள் இந்த ஹேஷ்டேக் மூலம் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இடையே டிவிகே ஃபார் டிஎன் ( #tvkfortn ) என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் பரவியது. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த நிலையில் சுமார் 4 லட்சம் ட்வீட்டுகள் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி போடப்பட்டது. இந்நிலையில், அண்ணா சாலையில் எங்கே வரவேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டு அண்ணா வழியில் மக்களுக்காக பாடுபடுங்கள் அண்ணாமலை என கூறியுள்ளார் திருச்சி சூர்யா சிவா.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," எடப்பாடி பழனிச்சாமி மோடியை கெட் அவுட் (கூட்டணிக்கு நீங்கள் தேவையில்லை) என்று கூறிய போது வராத கோபம் உதயநிதியிடம் மட்டும் வருவதற்கு காரணம் ஏனோ? அரசியலில் போட்டியும்,மோதலும் அவசியம் தான். ஆனால் அதனால் சமூகத்தில் ஏதும் நல்ல மாற்றம் நடந்தால் மகிழ்ச்சி, தற்போது நடக்கும் இந்த ட்விட்டர் போர் மூலமாக யாருக்கும் எந்த பயனும் இல்லை. இது உண்மையிலேயே மக்களின் மனநிலையை பிரதிபலிக்கவோ அல்லது கட்சியின் பலத்தை நிரூபிக்கவோ பயன்பட போவது கிடையாது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பாரத பிரதமர் மோடி அவர்களும் நாட்டின் மிகச்சிறந்த தலைவர்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. #GetOut யார் அதிகமாக ட்விட்டரில் பதிவு செய்கிறார்கள் என்பதை வைத்து வெற்றியையோ தோல்வியையோ காலம் நிர்ணயிக்க போவதில்லை. மக்கள் மனதிலும்,தேர்தலிலும் வெற்றி பெறுவதே அரசியல் கட்சிகளுக்கு முக்கியம் அதுவே வரலாற்றில் சரித்திரமாக பதிவேற்றப்படும்.ட்விட்டர் பதிவுகளின் எண்ணிக்கையை வைத்து அல்ல.

தேர்தல் என்பது ட்விட்டரில் பதிவிடவும் டுவீட்ஸ் (Tweets) வைத்த இல்லை. மக்கள் மனங்களை வென்று அவர்கள் அளிக்கும் ஓட்ஸ் (Votes) வைத்துத்தான் என்பதை அண்ணாமலை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ட்விட்டரில் வேண்டும் என்றால் நீங்கள் அதிக அளவு #GetOutStalin என்று டிரெண்ட் செய்திருக்கலாம் ஆனால் கடந்த தமிழக தேர்தல்களில் #GetOutModi என்பதே மக்களின் குரலாக ஒலித்திருக்கிறது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

எனவே தமிழக பாஜக வெறும் சமூக ஊடக கட்சியாக மட்டும் தமிழகத்தில் வலம் வராமல் சமூகத்துக்கு உதவும் கட்சியாக பாஜகவை வளர்க்க மாநில தலைவராக உருப்படியாக எதையாவது செய்யுங்கள். பேட்டை ரவுடி போல் நடந்து கொள்வதை விட்டுவிட்டு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற மாண்பை காப்பாற்ற விரும்புகிறேன். அண்ணா சாலையில் எங்கே வரவேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டு அண்ணா வழியில் மக்களுக்காக பாடுபடுங்கள் என்பதே எனது வேண்டுகோள்" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
English summary
DMK leader Surya Siva criticizes BJP's Annamalai, saying elections are won by people’s votes, not Twitter trends. Read more on the political war of words.
Read Entire Article