ARTICLE AD BOX
GBU: செம கடுப்பில் அஜித்.. எக்ஸ்க்யூஸ் கேட்ட குட் பேட் அக்லி பட இயக்குநர்.. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்டர்கள், படக்குழு வெளியிட்ட அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் செய்த விஷயம் அஜித்தை செம கடுப்பாக்கியுள்ளது.
அஜித் குமார் நடிப்பில் கடந்த 6ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்தை, மகிழ் திருமேனி இயக்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் அஜித் படம் என்பதால் மாஸான காட்சிகள் எல்லாம் இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் இயக்குநர் மகிழ் தெளிவாக சொல்லியிருந்தார். அதாவது, படத்தில் மாஸ் காட்சிகள் என ஒரு காட்சி கூட இருக்காது. ஆனால் படம் செம க்ளாஸாக இருக்கும் என உறுதி அளித்தார். அவர் கூறியது போல் படம் செம க்ளாஸாக இருந்தது.

ஆனால் மகிழ் கூறியதை புரிந்து கொள்ளாத அல்லது தெரியாத ரசிகர்கள் விடாமுயற்சி படத்தைப் பார்த்து பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இப்படியான நிலையில், படம் ரசிகர்களை கவராததால், வசூலிலும் அடிபட்டது. இதனால் வசூல் ரீதியாக தோல்வி படமாக மாறியது. இந்தப் படத்தின் ரிசல்ட் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்திலும் எதிரொலிக்கும் என்பது இயல்பானதுதான்.

அஜித்: ஏற்கனவே இரண்டு படங்களின் படப்பிடிப்பு, டப்பிங் என அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டு, அஜித் ரேஸில் களமிறங்கினார். அதனால்தான் ரேஸ்க்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், தனது தரப்பு வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்தார். இரண்டு படங்களுக்கும் பேச் ஒர்க் வேலைகள் இருந்தது. எனவே அஜித் இரண்டு படக்குழுவினருக்கும் உரிய முறையில் டேட் பிரித்துக் கொடுத்து நடித்துக் கொடுத்தார்.

குட் பேட் அக்லி: அஜித் கடுமையான காய்ச்சல் தனக்கு இருந்தபோதும் நடித்தார், அது மட்டும் இல்லாமல், அந்த காலகட்டத்தில் தனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போதும், தனது தாயாரை கூட போய் பார்க்காமல், அவர் நடித்துக் கொடுத்தார். இப்படி நடித்துக் கொடுத்துவிட்டு அஜித் கார் ரேஸில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.

கடுப்பில் அஜித்: இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படத்தின் பேட்ச் ஒர்க் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். இதில் த்ரிஷாவை வைத்து சில காட்சிகளும் மற்ற நடிகர்களை வைத்து சில காட்சிகளும் எடுத்து வருகிறாராம். இந்நிலையில் அஜித்தை வைத்து ஒருநாள் ஷூட்டிங்கும் எடுக்க வேண்டிய சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அஜித் தரப்புக்கு தகவல் தெரிவித்ததால், அஜித் செம கடுப்பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் அந்த ஒரு நாள் வந்து நடித்துக் கொடுப்பாரா, அல்லது டூப் போட்டு நடிக்க வைப்பார்களா என்ற பேச்சு அடிபடுகிறது.