ARTICLE AD BOX
GBU OG Sambavam Maamey: தொண்டை கிழிய போகுது.. ஜி.வி. பிரகாஷின் ஓ.ஜி சம்பவம்.. சொல்லி அடிக்கும் ஆதிக்!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள 1000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் படத்தின் முதல் பாடல் நாளை அதாவது மார்ச் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோ இன்று அதாவது மார்ச் 17ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது.
மைத்ரி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு முதலே தெரிவித்தது. அப்படி இருக்கும்போது, விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட சிக்கலால், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது.

குட் பேட் அக்லி: இப்படியான நிலையில், விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவியதால், அது குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்ட தேதியான, ஏப்ரல் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிரமான அஜித் ரசிகர் என்பதால் இந்தப் படத்தை தரமான ஃபேன் பாய் சம்பவமாக கொண்டு உருவாக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

டீசர்: மேலும் ஏற்கனவே படக்குழு தரப்பில் வெளியான டீசர் ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரை உலகையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருந்தது. அதிலும் அஜித்தின் மாஸான காட்சிகள், டயலாக்குகள், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை என அனைத்துமே அட்டகாசம். மேலும் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை டீசர் பெற்றதால், தமிழ் சினிமா வரலாற்றில் 24 மணி நேரத்தில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட டீசர் என்ற பெருமையைப் பெற்றது. டீசரே இந்த சம்பவம் என்றால், டிரைலருக்கு என்ன மாதிரியான சாதனையை அஜித் ரசிகர்கள் படைக்க உள்ளார்கள் என ஆவலோடு திரையுலகம் காத்துக் கொண்டுள்ளது.

ஓ.ஜி. சம்பவம்: இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்பவம் பாடல் நாளை அதாவது மார்ச் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ இன்று அதாவது மார்ச் 17ஆம் தேதி படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளார்கள்.
இது மட்டும் இல்லாமல், பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். ப்ரோமோவில் ஜி.வி. மற்றும் ஆதிக் இணைந்து தொண்டை கிழிய சத்தமாக இந்த பாடலைப் பாடியுள்ளார்கள். மேலும் பாடலின் வரிகள் அஜித்திற்காக ஒவ்வொரு வார்த்தைகளாக சேர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. பாடல் நாளை மாலை 5.05க்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளார்கள்.