ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப காலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். அவர்கள் சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக விலகுவதாக கூறுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் முருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் இருக்கிறார். அவரும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தர்மபுரி மண்டல செயலாளர் அண்ணாதுரை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.