ARTICLE AD BOX

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கழக செயலாளர் தினேஷ்குமார். கடந்த 25-ஆம் தேதி கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த வினோத், அப்பு ஆகியோர் இணைந்து தினேஷ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற மோகன் என்பவரையும் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
மேலும் திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்தும், தினேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் தடையை மீறி திருக்கழுக்குன்றத்தில் போராட்டம் நடத்த முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.