ARTICLE AD BOX
நமது வீடுகளில் அசைவ உணவுகளில் குழம்பு, வறுவல் போன்றவைகளைத் தான் வழக்கமாக செய்வோம். அசைவ உணவுகளில் மிகவும் பிரபலமான உணவு என்றால் அது கடல் உணவு தான். இது சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். எனவே பலரும் கடல் உணவுகளுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். மீன் தான் கடல் உணவில் முக்கியமான உணவாக இருக்கும். இந்த மீனை வைத்து சுவையான குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் சிறப்பான தருணங்களில் மீனை வைத்து சுவையான கட்லெட் செய்யலாம். இது சிறந்த திர்வாக இருக்கும். இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பொருள்அளவு
மீன் அரை கிலோ
பச்சை மிளகாய் 5
புதினா 1 கைப்பிடி
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் 3
உருளைக்கிழங்கு 3
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை 1 கைப்பிடி
மைதா 2 டேபிள் ஸ்பூன்
ப்ரெட் 2 துண்டு
மேலும் படிக்க | சாதம் மீதம் ஆகிருச்சா? முட்டை பிரைட் ரைஸ் செய்யலாமே!
செய்முறை
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். வேக வைத்த பின் மீனின் முள்ளை நீக்கிவிட்டு அதை உதிர்த்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ப்ரெடை தூளாக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் ஆறிய பின் வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலா போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
உதிர்த்த மீனுடன் அரைத்த மசாலா மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது கெட்டியான பதத்திற்கு கரைத்து வைக்க வேண்டும். பின்னர் ப்ரெட் தூளை ஒரு தட்டில் பரவலாக போட்டு கொள்ளுங்கள். பிசைந்து வைத்த மீன் கலவையை வடையை போல் தட்டி முதலில் மைதா கரைசலில் போட்டு, பின் ப்ரெட் தூளில் பிரட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் எண்ணெயில் போட்டுப் இரண்டு பக்கங்களும் நன்கு சிவக்குமாறு பொரித்து எடுக்கவும். அல்லது தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும். சுவை மிகுந்த கட்லட் தயார். இதனுடன் சாப்பிட சாஸ் அல்லது ஜாம் சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் சிறப்பான நிகழ்ச்சி ஏதேனும் இருந்தால் இதனை ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுத்து பாருங்கள். இது உங்களுக்கு சிறந்த திர்வாக இருக்கும்.

டாபிக்ஸ்